போலி ஆவணங்களை தயாரித்து வாகனம் விற்ற நபர் ஒருவர் தென்னிலங்கையில் பொலிஸாரால் கைது!

Monday, December 27th, 2021

போலி ஆவணங்களை தயாரித்து யாழ்ப்பாணம் நல்லூர் வாசியொருவருக்கு பெரும் தொகைக்கு வாகனம் விற்ற நபர் ஒருவர் தென்னிலங்கையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

சந்தேக நபர் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி , போலி ஆவணங்களை தயாரித்து யாழ்ப்பாணம் நல்லூர் வாசியொருவருக்கு 5.7 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்து ஏமாற்றியதாக யாழ்ப்பாணம் பொலிசாரிடம் முறையிடப்பட்டது.

இதனையடுத்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மாத்தளையில் வைத்து கைது செய்துள்ளனர். 46 வயதான சந்தேக நபர் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

000

Related posts:


யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முதலாம் கட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவு - மக்கள் குழப்பமடைய தேவைய...
செப்டெம்பரில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!
இந்திய - இலங்கை உறவு என்பது நட்புக்கு அப்பாற்பட்ட சகோதரத்துவமாகும் - தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ...