சூரிய சக்தியில் நீர் இறைக்கும் செயற்றிட்டம் குடாநாட்டில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது!

Tuesday, June 26th, 2018

சூரிய சக்தியில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரப் பாவனை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் விவசாயம் மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கின்றது. ஆகவே விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை அனைத்துக் காலத்திலும் பெற்றுக்கொள்வது அவசியம்.

விவசாயிகள் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு மின் மோட்டர் மற்றும் மண்ணெய்யில் இயங்கும் மோட்டார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பு, மின் கட்டணம் செலுத்துவதற்கு அதிகபணம் செலவிடப்படுகின்றது.

ஆகவே இயற்கையாகக் கிடைக்கும் சூரிய ஒளியை உள்வாங்கி அதன் மூலம் செயற்படும் தண்ணீர் இறைக்கும் மோட்டர்களைத் தற்போது அரச தலைவர் செயலகம் அறிமுகப்படுத்தி வருகின்றது.

இந்த மோட்டர்களை மானிய விலையில் வழங்கவும் அரசு முன்வந்துள்ளது. அரச தலைவர் செயலகம், மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண விவசாய நிலங்களை இயற்கை சூரிய ஒளிக்கதிர் மூலமான மின்சாரத்தைப் பெற்றுச் சிறந்த நீர்ப்பாசனம் மூலமாக விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய வேலைத்திட்டம் யாழ்ப்பாணம் நவக்கிரி வடக்கு மத்திய பகுதியில்  அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Related posts: