தீவிர பாதுகாப்பில் இலங்கை விமான நிலையங்கள்

Monday, July 3rd, 2017

இலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் பாதுகாப்பாக உள்ளதென இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. விமான ஓடுபாதைகள் உள்ள இடங்களில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக விமானப் படை ஊடக பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு ஐ.எஸ் அமைப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவரிடம் வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரத்மலானை விமான நிலையத்தில் விமானம் ஒன்றை கடத்தி அமெரிக்க தூதரகத்தை தாக்குதவதற்காக ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆயத்தமாகுவதாக ஊடங்களில் செய்தி வெளியாகியிருந்தனஇந்த தகவல் ஊடகங்களில் மாத்திரமே வெளியாகியிருந்ததாக விமானப்படை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பில் இன்னமும் எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.யுத்த காலம் மற்றும் அதன் பின்னரும் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைபாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக வெளியான தகவல்கள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.கருணாசேன ஹெட்டியாரச்சி தற்போது அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

குடிவரவு குடியகழ்வு தொடர்பில் கன்பராவில் நடைபெற்று வரும் மாநாடு ஒன்றில் கருணாசேன ஹெட்டியாரச்சி பங்கேற்றுள்ளார்.இந்த நிலையில் கொழும்பு ஊடகமொன்று, ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் தமக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் சமூக ஊடக வலையமைப்புக்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

தாம் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும், தெரியாத விடயம் ஒன்று பேச முடியாது எனவும் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் பதவியில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு - வாக்காளர் பதிவேடு குறித்த விபரங்கள...
செப்ரொம்பர் முதலாம் திகதிமுதல் அனைத்து பாடசாலைகளையும் வழக்கம் போல பராமரிக்குமாறு கல்வி அமைச்சின் செ...
மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன - தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாராகவே இருக்க...