கொரோனா குறித்த தகவல்களை அரசியலாக்காதீர்கள் – அரசியல்வாதிகளிடம் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை!

Wednesday, May 6th, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பில் பொய்யான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த புள்ளிவிபரத் தகவல்களை வெளியிடுவதனை தவிர்க்குமாறும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும் பிழையான தகவல்களை வெளியிடுவது கொரோனா நோய்த் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தவதற்கு சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரப் பிரிவினர் இந்த நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை விஞ்ஞானபூர்வ அடிப்படையிலேயே மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சில அரசியல்வாதிகள் பிழையான தகவல்களை வெளியிடுவது தொற்று பரவுகையை ஒழிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 வீதம் எனவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் 13 வீதமாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது எனவும் வைத்தியர் ஜாசிங்க சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: