ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் திடீரென மாற்றம் – மீண்டும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு!

Friday, May 6th, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்ததையடுத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரம் நேற்றுமுதல் மீண்டும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா நேற்று முதல் ஜனாதிபதி பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நுகேகொடையில் நிறுவப்பட்ட புலனாய்வு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் பிரதானியான பொலிஸ் அத்தியட்சகர் JBT.ஜயலத் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை மற்றும் சிவில் விவகாரங்களில் இராணுவம் தலையிட முடியாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை சுமார் 400 பொலிஸாரையும், பெருமளவிலான இராணுவத்தினரையும் உள்ளடக்கிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரின் கட்டளையின் கீழ் செயற்பட்டு வந்துள்ளது.

தற்போது அங்கு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் குழுவிற்கு மேலதிகமாக, ஆரம்பகால பாதுகாப்பில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் குழுவொன்று ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுடன் இணைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மீள்குடியேறிய மக்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாக்கப்பட வேண்டும்! மீள்குடியேற்ற அமைச்சிடம் ஈ.பி.டி...
இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 15 ஆயிரம் படையினருக்கு பதவியுயர்வு - இராணுவத் தளபத...
பசிலின் நாடாளுமன்ற பிரவேசம் தொடர்பில் அவரே முடிவெடுக்கவேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!