நாடளாவிய ரீதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு – களத்தில் 12000 படையினர் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் தகவல்!

Saturday, April 3rd, 2021

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்காக பன்னிரெண்ராயிரம் பாதுகாப்பு தரப்பினர் களமிறக்கப்பட்டுள்ளனர் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனபடி நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களினதும் பாதுகாப்பிற்காக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பாதுகாப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு சுற்றறிக்கையின் கீழ் இந்த சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையைச் சேர்ந்த மொத்தம் 9 ஆயிரத்து 365 அதிகாரிகள் கடமைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலும் 2,522 முப்படை வீரர்களும் பாதுகாப்பு வழங்க ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் தாக்குதல் நடத்தப்பட்ட நீர்கொழும்பு, சிலாபம், மற்றும் மட்டக்களப்பைச் சுற்றியுள்ள தேவாலயங்களில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: