வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய புனித்தன்மை அழிக்கப்படுகின்றது – பூசகர் குற்றச்சாட்டு!

Saturday, January 30th, 2021

யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் புனித தன்மையை பாதிக்கும் வகையில் வலி,வடக்கு பிரதேசசபை நடந்து கொள்வதாக ஆலய குருக்கள் தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி காலத்தில் ஆலயத்தை சூழ 500 மீற்றருக்குள் எந்தவொரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாதென பணிப்புரை விடுக்கபப்ட்டிருந்தது.

இந்த நிலையில் ஆலயத்தை சூழவுள்ள காணிகளில் கட்டுமானங்கள் செய்யப்பட்டு, ஆலயத்தின் புனித தன்மையையும், பழமையினையும் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுவதாக பூசகர் குறிப்பிட்டுள்ளார்..

நிலமை இவ்வாறிருக்க பிரதேசசபை தொடர்ச்சியாக ஆலயத்தின் புனித தன்மை மற்றும் பழமையை பாதிக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

அத்துடன் கீரிமலை தீர்த்தகேணியும் கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகி பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

000

Related posts: