தகவல் வழங்கும் போது அச்சம் கொள்ள வேண்டாம்!

Wednesday, July 5th, 2017

தகவல் வழங்கும் போது, அச்சம் கொள்ள வேண்டாம் என, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட திணைக்கள பிராதானிகளிடம் கோரியுள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் எந்தவொரு விடயம் தொடர்பிலும், உரிய தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், சில திணைக்களங்களில் மக்களால் கோரப்படும் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என, பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  எனவே, தகவல்களை வழங்குமாறு தமது ஆணைக்குழுவால் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டிய நிலையும் தோன்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்களிலுள்ள தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பொது மக்களுக்கு உரித்துடையது எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  எதுஎவ்வாறு இருப்பினும், இது குறித்து திணைக்கள பிரதானிகளுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts:


சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் – அமைச்சர் தினேஷ்...
பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை - ஜனாதிபதி செயலணியின...
பொறுப்பற்ற சிலரின் செயற்பாடுகளால் நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்...