வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு வருவதற்கு வெளியுறவு அமைச்சின் அனுமதி தேவையில்லை – இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர!

Tuesday, April 6th, 2021

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு மீண்டும் வருவதற்கு வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியை பெறத் தேவையில்லை என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோயால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட ஏராளமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்தநிலையில் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அழைத்துவர அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்தது.

முன்பதாக இவ்வாறு திரும்பிவர தயாராக உள்ளவர்கள் மற்றும் சொந்த செலவில் திரும்பத் தயாராக உள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைய வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியைப் பெற அறிவுறுத்தப்பட்டனர்.

எனினும், வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு இதுபோன்ற அனுமதி தேவையில்லை என்றும்  கொவிட் செயலணி அறிவித்துள்ளது.

இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் - ஈ.பி.டி.பியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ்!
இளைஞர் விவகார அமைச்சு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு மாற்றம் – அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நடவடிக்கை!
இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்களிடமிருந்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் - பெப்ரல் அமைப்பு வலியுறுத்து...