மாணவர் காப்புறுதியை பயனுடையதாக்குங்கள் -கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Friday, June 22nd, 2018

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர் காப்புறுதி தொடர்பாக விழிப்புணர்வு தேவை. மேற்பார்வைக்காகச் செல்லும் அதிகாரிகள் இது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும் என்று கல்வி அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

தற்போது கல்வியமைச்சு ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாணவர்களுக்கான சுரக்ஸா காப்புறுதித் திட்டத்தில் நிறைந்த பயன்பாடுகள் உள்ளன. அவற்றை வடபகுதி மாணவர்கள் முறையாக விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.நாடுமுழுவதும் உள்ள மாணவர்களைக் காப்புறுதித் திட்டத்தில் உள்வாங்கி அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை ஆதாரமாகக் கொண்டு ஒரு மாணவர் ஒரு நாள் வைத்தியசாலையில் இருந்தால் கூட இந்தத் திட்டத்தினூடாக அதன் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும். எனினும் வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறுவதில் அக்கறையற்று இருக்கின்றனர்.

எனவே பாடசாலை தரிசிப்புக்காகச் செல்லும் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் பாடசாலை சமூகத்தினரை விழிப்படையச் செய்ய வேண்டும். அத்துடன் பெற்றோர்களும் இந்த விடயத்தில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

Related posts: