வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதில் தாமதம் – தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் பாவனையில் – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர!

Sunday, March 20th, 2022

8 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்குத் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை தொடர்ந்து, பிளாஸ்டிக் கரண்டிகள், ஐஸ்கிரீம் கோப்பைகளுக்குப் பதிலாக பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

எவ்வாறாயினும், குறித்த வர்த்தமானி அறிவித்தல் தாமதமாகி வருவதனால் இந்த நிறுவனங்கள் மீண்டும் பிளாஸ்டிக் பாவனைக்கு திரும்புவதாக சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: