மூன்றாவது டோஸ் தேவையெனின் அதனை வழங்க இலங்கை தயார் – விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021

கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது டோஸ் தேவையெனின், அதனை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் செப்டெம்பர் இறுதிக்குள் உலக சனத்தொகையில் 40 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்த்துள்ளது.

அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் உலக சனத்தொகையில் 70 சதவீதமானோருக்கு தடுப்பூசியை ஏற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது டோஸ் முழுமையாக வழங்கப்படும் வரையில், மூன்றாவது டோஸை வழங்காமல் இருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், மூன்றாவது டோஸ் தேவையெனின், அதனை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: