சிறைச்சாலைக்குள் தொலைபேசி அழைப்புகளை தடுப்பதற்கு புதிய வேலைத்திட்டம்

Friday, April 22nd, 2016

சிறைச்சாலைக்குள் கைதிகள் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புகளை தடுப்பதற்கு புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொலைபேசி அழைப்புகளை காட்டிக் கொடுப்பதற்கான சமிஞ்சை உபகரணங்களை சிறைக் கூடங்களில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு மற்றும் நாட்டிலுள்ள தொலைபேசி நிறுவனங்களினது தலைவர்களிடமும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும். இந்த கலந்துரையாடலின் ஊடாக சிறைச்சாலை வளாகத்திற்குள் தொலைப்பேசி அழைப்புகளை இடைநிறுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் மாதத்திற்குள் இந்த திட்டம் அமுல்படுத்தப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். மேலும் தற்போது காணப்படும் சமிஞ்சை கட்டமைப்பில் சிறிய கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை புதிய தொழிநுட்பத்தின் கீழ் சீர் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: