இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுவோம் – பிரான்ஷ்!

Saturday, June 8th, 2019

இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்குவதாக பிரான்ஷ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

பாரிஸின் பிரதி நகரமுதல்வர் ஜேன் ஃப்ரான்சுவா மார்டின், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கையில் அரசாங்க உயர்மட்டத்தினருடன் சந்திப்புகளை நடத்தி இருந்தார்.

இதன்போதே இந்த உறுதிமொழியை அவர் வழங்கியதாக கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக தமது நாட்டு பிரஜைகளை இலங்கைக்குச் செல்ல வேண்டாமென பல நாடுகள் தடை விதித்தன. இதன் காரணமாக சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதனைடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியார் ஏனைய நாடுகளிடம் இலங்கைக்கான தடையை நீக்குமாறு வலியுறுத்தினர்.

அதனையடுத்து பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகள் தடையை நீக்கியுள்ளன. இவ்வாறான நிலையிலேயே இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்குவதாக பாரிஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

Related posts:

அடுத்த மூன்றுவாரங்களே மிகவும் தீர்க்கமானவை - போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை பொதுமக்கள்...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் கடற்கரையில் இருந்து அகற்றம் - நகர அபிவிருத்...
உடைந்து விபத்துக்குள்ளான பாலத்தை புதுப்பிக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப...