பாரிசவாத இறப்புக்கள் அதிகரிப்பு – முதியவர்கள் தொடர்பில் அவதானம் தேவை என வைத்திய நிபுணர் பேரானந்தராஜா எச்சரிக்கை!

Tuesday, May 7th, 2024

வடக்கில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக நாள்பட்ட நோய் உள்ள முதியவர்களுக்கு வெப்பப் பாரிச வாதம் ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம் காணப்படுவதாக யாழ்ப்பாண வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணர் பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –  புவியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு பிளாஸ்டிக்  பொழுதின் பாவனை மற்றும் மரங்களை வெட்டுதல் பிரதான காரணமாக அமைகிறது. இயற்கைச் சூழலை மனிதன் குழப்புவதால் தேவையற்ற பாதிப்புகளை உலகம் எதிர் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போது புவியின் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் வயதான நாள்பட்ட நோயாளர்களின் இறப்பு யாழ் போதனா வைத்தியசாலையில் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே நாள்பட்ட நோய்களான இதய நோய் சிறுநீராகப் பாதிப்பு இரத்தக் குழாய் பாதிப்பு போன்றவர்கள் இந்த வெப்ப பாரிச நோயினால் இறக்கும் தன்மை காணப்படுகிறது.

அதுமட்டுமல்லாது தசை நோ தசை பிடிப்பு மற்றும் உடல் சார்ந்த உபாதைகள் பல இந்த வெப்பத்தினால் ஏற்படுகின்றது.

அதிகரித்த வெப்பம் காரணமாக முதியவர்களின்  உடலின் வெப்பம் அதிகரிக்கிறது அதன் காரணமாக வியர்வை அதிகமாக வெளியேறும் நிலையில் அவர்கள் அதிகளவிலான நீரை அருந்த வேண்டும்.

அது மட்டுமல்லாது குளிர்மையான இடங்களில் அவர்களை தங்க வைத்தல் பழங்கள் மற்றும் அதிக குளிரான நீரை தவிர்த்து அடிக்கடி நீரை அருந்த செய்தால் வெப்பப் பாரிசவாதத்தை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: