சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சில் ஸ்தம்பிதம் – சீனா!
Sunday, June 3rd, 2018
இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து தமக்கு தெரியாது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுஹா சனியிங் (Hua Chunying தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரியால் வெளியிடப்பட்ட தகவல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளரிடம் ஊடகவியலாளரினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறித்த விடயம் தொடர்பில் தமக்கு தெரியாது என்றும், அதனை வர்த்தக அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜனாதிபதி கோரிக்கை!
அசாதாரண காலநிலை - பாகிஸ்தானில் 86 பேர் பலி - 151 பேர் படுகாயம்!
அரச துறையில் ஊழலை தடுக்க புதிய வேலைத்திட்டம் - துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத்குமார சும...
|
|
|


