பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு நடந்தது என்ன? – இயக்குனர் நாயகம் அதிரடி!

Monday, February 4th, 2019

இலங்கையின் பிரதான மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் பாரிய முறையில் மேம்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்காக 30 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மண்டப தொகுதியின் இயக்குனர் நாயகம் சுனில் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்குள் நிறைவடையவுள்ள இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் இருந்து புதிய கருவிகள் மற்றும் புதுப்பித்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முதலாவதாக இடம்பெற்ற சர்வதேச மாநாடு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் நடைபெற்ற அணி சேரா நாடுகளின் மாநாடாகும்.

இந்த நிலையில், பூகோள ரீதியான வனஜீவன மாநாடு இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாரந்தனை ஶ்ரீமுருகன் வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் நே...
கொரோனாத் தொற்றினால் இதுவரை 67 சிறுவர்கள் உயிரிழப்பு - ஒரு மாதத்திற்கும் குறைவான 17 சிசுக்களும் பலி எ...
வட மாகாண சுகாதாரத் துறையினருக்கு இன்றுமுதல் “பூஸ்டர் தடுப்பூசி” - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த...