கொலன்னாவ பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் களஞ்சியம் !

Monday, December 25th, 2017

கொலன்னாவ பிரதேசத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் களஞ்சிய நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இது பத்து தாங்கிகளை உள்ளடக்கியதாகும். 11 ஆயிரத்து 200 மெற்றிக்தொன் கொள்ளவைக் கொண்ட மூன்று தாங்கிகளும், 11 ஆயிரத்து 900 மெற்றிக் தொன் விமான எரிபொருளைக் கொண்ட தாங்கியும் , 12 ஆயிரத்து 600 மெற்கிக் தொன் டீசலைக் கொண்ட தாங்கியும், ஐயாயிரத்து 800 மெற்றிக் தொன் டீசல் அடங்கிய மூன்று தாங்கிகளும், ஐயாயிரத்து 600 மெற்றிக் தொன் மண்ணெண்ணை தாங்கியும், இதில் அடங்கும்.

2009 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் பெற்றோல் பாவனை 90 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அர்ஜூண ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: