ஐரோப்பாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் – கொன்று குவிக்கப்படும் பறவைகள்!

Wednesday, October 5th, 2022

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இந்த கோடையில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பறவைகள், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை காட்டு மற்றும் வீட்டுப் பறவைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்களுக்கமைய, கடந்த இலையுதிர்காலத்தில் இருந்து இதுவரையில் 47.5 மில்லியன் பறவைகள் அழிக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குறிப்பு ஆய்வகம் ஆகியவற்றின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, காட்டு பறவைகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் கோழிப்பண்ணைகளில் கிட்டத்தட்ட 2,500 பறவைக் காய்ச்சல்கள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் காட்டுப் பறவைகளில் 3,500 க்கும் மேற்பட்ட தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் 190 நோய் தொற்றுகள் உயிரியல் பூங்காக்கள் போன்ற வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விலங்குகளிடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுகல் முதல் ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள நோர்வே தீவுக்கூட்டம் ஸ்வால்பார்ட் வரை பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: