எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும்

Wednesday, June 21st, 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவிலேயே நடத்தப்பட முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கெஃபே நடத்திய கருத்தரங்கு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்உள்ளுராட்சி மன்றங்கள் குறித்த தேர்தல் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும் ஜுலை மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

அதன் பின்னர் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரால் கைச்சாத்திடப்படுவதற்கு மேலும் காலம் எடுக்கும் சபாநாயகர் கைச்சாத்திட்டதன் பின்னர், தேர்தல்களை ஒழுங்கு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு குறைந்த பட்சம் 75 நாட்கள் அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

அடுத்த மூன்று வாரங்களுக்குள் அனைத்து பல்கலைக் கழகங்களும் திறக்கப்படும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணை...
வருமான வரியை அந்தந்த நிறுவனங்களின் நிதி மூலம் செலுத்துவதைத் தடை செய்ய நிதி அமைச்சு தீர்மானம்!
சீன ஆராய்ச்சி கப்பலை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில், இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை - வெள...