இந்திய பிரதமர் மோடி- ராஜபக்ச நள்ளிரவு சந்திப்பின்  பின்னணி

Tuesday, May 23rd, 2017

இந்தியப் பிரதமர் நரேந்திதிர மோடியின் சமீபத்திய இலங்கை சுற்றுப் பயணத்தின்போது எந்தவித முன்னறிவிப்புகளுமில்லாமல் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடனான  நள்ளிரவு சந்திப்பு அரசியல் – ராஜதந்திர வட்டாராங்ககளில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது.

மோடியின் இலங்கை வருகைக்கு சில தினங்களுக்கு முன்னதாக ராஜபக்சவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாகவும் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த மோடி – ராஜபக்சவின்  நள்ளிரவுச் சந்திப்பு அரசியல் ரீதியில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மே தின அச்சுறுத்தல்கள் காணப்பட்ட சூழலில் இலங்கையுடன் செய்யப்படும் சர்ச்சைக்குரிய ஒப்பந்தங்களில் மோடி கையெழுத்திடுவதற்காக மட்டும் இந்தக் கருப்புக் கொடிப் போராட்டம்  நடத்தவில்லை என்றும் கடந்த 2015-ல் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்ச படுதோல்வி அடைந்ததற்கு இந்திய அரசும் காரணம் எனவும்  விமல் வீரவன்ச  பகிரங்கமாக  குற்றஞ்சாட்டியிருந்தார். இப்படி அடுக்கடுக்கான கண்டனக் குற்றச்சாட்டுகள் அணிவகுத்திருந்த நிலையில் மோடியும் ராஜபக்சவும் நட்புடன் நள்ளிரவில் கை குலுக்கிக் கொண்டதை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இந்தியப் பிரதமரை ராஜபக்ச சந்திப்பதற்கான  அனுமதி வேண்டி இலங்கையின் முன்னாள்  வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஷ்தான் தீவிரம் காட்டியதாக சொல்லப்படுகிறது. ஜனாதிபதி மைத்ரிபால ஸ்ரீசேனாவும்  இதுதொடர்பாக டெல்லியை தொடர்பு கொண்டு   ராஜபக்சே-  மோடியின் சந்திப்புக்கு வேண்டுகோள் வைத்திருந்ததாக புது டெல்லி வட்டாரத் தகவல்கள் தேரிவிக்கின்றன..

இந்தச் சந்திப்பு நடைபெற்றதற்கு 15 தினங்களுக்கு முன்புதான் இந்திய விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய அரச தலைவர்களை மட்டுமல்லாது   எதிர்க்கட்சித் தலைவர்களான சோனியா காந்தி,மன்மோகன் சிங்க் ஆகியோரையும் டெல்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பிரதமர் மோடியின் விமானம் பறக்கத் துவங்கியபோதுதான் ராஜபக்க்ஷ சந்திப்புக்கு  டெல்லியிடமிருந்து பச்சைக் கோடி காட்டப் பட்டதாக சொள்லபடுகிறது.  இலங்கை பயணத்தின்போது மோடிக்கு  கடும் நேர நெருக்கடியான நிகழ்ச்சிகள் அட்டவணையிடப்பட்டிருந்த நிலையிலும்  கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தி இரு நாட்டுத்  தலைவர்களின் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மகிந்த ராஜபக்ச அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச டாக்டர் G.L.பீரிஸ் ஆகியோர் மோடியை சந்திக்க  இந்தியா இல்லத்திற்கு வந்தனர்.  மோடியுடன் இந்திய தேசிய பாதுகாப்பு  ஆலோசகர் அஜித் டோவல்,வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்து ஆகியோர் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது  பெரும் ரகசியமாகவே வைக்கப் பட்டிருந்தாலும் ராஜபக்சவை  இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும்   இது இலங்கை அரச மட்டத்தில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்வையும்  உருவாக்கி இருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தேர்விகின்றன. மோடியின் இந்த அழைப்பை அரசியல் பார்வையாளர்கள் வெறும்  அழைப்பாக மட்டும் பார்க்கவில்லை. ராஜபக்சவை  இந்தியா முற்று முழுவதுமாக கை விட்டு விடவில்லை என்பதைக் காட்டுவ தற்கான செய்தியாகவே  பார்க்கப்படுகிறது.

ராஜபக்ச பதவியில் இல்லாத முன்னாள் அதிபர்.  மோடி அவரை சந்திப்பதற்கான  எந்த திட்டமும் முன்கூட்டியே இல்லை. அதற்கான நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் கூட இடம்பெறாத சூழலில் ராஜபக்சவை மோடி சந்திக்க காரணம் என்ன என்பது அதிகம் அறிந்து கொள்ள முடியாத ஒன்று என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மோடியின் இலங்கை வருகைக்கு கறுப்புக் கொடி காட்டப்போவதாக முதலில் அறிவித்திருந்த நிலையில் எப்படி இருவரும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது…? மோடி எப்படி இதற்கு அனுமதி கொடுத்தார்,,, ? என்ற கேள்விகளுக்கு  விரைவில் இலங்கையில் தேர்தல் ஒன்று வரப் போகிறது அதில்  அடுத்த அதிபராக   ராஜபக்சதான் தேர்வாவார் என்பது இந்திய அரசுக்கு தெரிந்து விட்டது அதனால்தான் இந்தச் சந்திப்பு.. ‘என்று தெரிவித்துள்ளார்  ராஜபக்சவின் விசுவாசியும் நாடாளுமன்ற உறுப்பினருமான  விமல் வீரவான்ச.

Related posts: