வருமான வரியை அந்தந்த நிறுவனங்களின் நிதி மூலம் செலுத்துவதைத் தடை செய்ய நிதி அமைச்சு தீர்மானம்!

Tuesday, January 10th, 2023

அரசு மற்றும் அரை அரசு நிறுவனங்கள், ஊழியர்களின் ஊதியம் (PAYE) வருமான வரியை அந்தந்த நிறுவனங்களின் நிதி மூலம் செலுத்துவதைத் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பான சுற்றறிக்கை இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அளவைத் தாண்டி வருமானம் ஈட்டும் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்காக வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ஊழியர்களின் வரி செலுத்துதலுக்கு அரச மற்றும் அரை அரசாங்க நிறுவனங்களின் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரச மற்றும் அரை அரச ஊழியர்களுக்கு நிறுவனங்களின் நிதியின் ஊடாக செலுத்தும் வரியை செலுத்துவதை தடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts: