அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனத்தில் இழுபறி!
Tuesday, November 14th, 2017
அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தரம் iii இற்கான நியமனங்கள் வடமாகாண சபையினால் இன்னும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 29. ஆம் திகதி வடமாகாண சபையால் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தரம் iii இற்கான போட்டி பரீட்சை நடாத்தப்பட்டது. பெறுபேறுகள் 29.08.2017ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இருப்பினும் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இரண்டு மாதங்களைக் கடந்த நிலையில் இதுவரை பரீட்சையில் தெரிவானவர்களுக்கான நேர்முக தேர்வு இடம்பெறவில்லை எனவும், அதற்கான திகதிகள் அறிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.
இதனால் நாம் புள்ளிகள் பெற்று தெரிவாகிய போதிலும், எங்களுக்குரிய நியமனத்திற்கான காலம் இழுத்தடிக்கப்படுவதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதெனவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
பொறுப்பு கூற வேண்டியவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரான் விவகாரம் -இலங்கையின் புலனாய்வு வலையமைப்பு தொடர்பில...
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை - முல்லைத்தீவு மாவட்டத்தில் 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிப...
|
|
|


