கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் உயிரிழப்பு!

Monday, May 17th, 2021

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் நாட்டில் பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 962 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று பதிவான மரணங்களில் 16 ஆண்களும் , 5 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையின் அடிப்படையில், பதுளை, கெலிஒயா, யாழ்ப்பாணம், இங்கிரிய, நேபொட, புளத்சிங்ஹல, இமதுவ, முருன்கஹமுல, அநுராதப்புரம். மொரட்டுவ மற்றும் மீரிகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே மரணித்தனர்.

அத்துடன், ஹாலி-எல, ஹந்தபான்கொட, ஹபராதுவ, எம்பிலிபிட்டி, நாகியாதெனிய, கடவத்த, மஹிய்யாவ, களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதேநேரம் காலி பகுதியை சேர்ந்த தலா 2 பேரும் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மரணித்த 21 பேரில் 19 பேரின் மரணத்திற்கு கொவிட் நியூமோனியா நிலைமையே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி டெங்கு பரிசோதனைக்கு அனுமதியுங்கள் -  யாழ். பிராந்திய சுகாதார பணிமனை!
நாட்டில் 365 நாட்களுள் 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி - அரசாங்கத் தகவல் திணைக்கள...
இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது - இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெ...

நான்கு கட்டங்களாக நாடளாவிய ரீதியில் மின்வெட்டு - அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய மின் சாதனங்களை தவ...
பாடசாலைகளில் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பம் - சுற்றறிக்கை வெளியிடப்படும் என க...
ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!