இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது – இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021

இந்தியாவின் லைவ்ப் லைன் (“Lifeline”)  திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்கள்,  விசாகப்பட்டினம் மற்றும் சென்னையிலிருந்து கப்பல் ஊடாக  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்திய அரசு கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு அவசர ஒட்சிசன் பொருட்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

ஒக்சிமீட்டர் ஒன்றுக்கான அதியுட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்சிமீட்டர் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா என அதியுட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விலை அழிக்க முடியாத வகையில் ஒக்சிமீற்றரில் விலை காட்சிப் படுத்தப்பட்டிருத்தல் வேண்டும் எனவும் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: