ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி டெங்கு பரிசோதனைக்கு அனுமதியுங்கள் –  யாழ். பிராந்திய சுகாதார பணிமனை!

Tuesday, January 9th, 2018

அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தில் பொது சுகாதாரப் பரிசோதகர் எனவும், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடுவோர் என கூறியும் மக்களை ஏமாற்றி சில கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இது சம்பந்தமாக விழிப்பாக இருக்குமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார திணைக்களத்தை சேர்ந்த நிரந்தர உத்தியோகத்தர்கள் அவர்களுக்கான சீருடையுடனும், திணைக்கள அடையாள அட்டையுடனும் வெளிக்களத்தில் கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் புதிதாக தற்காலிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் திணைக்கள அடையாள அட்டையுடன் வெளிக்களத்தில் கடமையாற்றி வருகின்றனர்.

சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நாய்களுக்கான விலங்கு விசர் நோய் தடுப்பு மருந்தேற்றல் நிகழ்வு அறிவிக்கப்பட்ட நிலையங்களின் ஊடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வீடுகளிற்குச் சென்று தடுப்பூசி ஏற்றப்படும் நடைமுறை மேற்கொள்ளப்படுவதில்லை.

எனவே டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடுவோரை மக்கள் தங்கள் வீடுகளுக்கு அனுமதிக்கும் முன் அடையாளத்தை கோரி உறுதிப்படுத்திய பின்னர் அனுமதிக்கவும். இது சம்பந்தமாக குறிப்பிட்ட நபர்கள் மீது சந்தேகம் ஏற்படின் தங்கள் பகுதி பொது சுகாதாரப் பரிசோதகருடன் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளின் தொலைபேசி இலக்கங்களான நல்லூர் 021 224 1183, சங்கானை 021 221 1660, ஊர்காவற்றுறை 021 221 1555, கோப்பாய் 021 205 3702, வேலணை 021 227 0014, சண்டிலிப்பாய் 021 225 5248, தெல்லிப்பழை 021 224 1182, உடுவில் 021 225 0732, சாவகச்சேரி 021 227 0014, பருத்தித்துறை 021 226 4482, கரவெட்டி 021 226 1006, யாழ்ப்பாணம் 021 222 2645, காரைநகர் 021 224 1944 என்பவற்றுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

Related posts:

இந்தியப் பிரதமரின் கருத்து மிகப்பெரும் கௌரவத்தையம் பெருமையையும் அளித்துள்ளது - முரளிதரன் !
நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய உற்சவ காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றாக தடை - வேலணை பிரதேச...
எதிர்வரும் வியாழன்முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறு...