நான்கு கட்டங்களாக நாடளாவிய ரீதியில் மின்வெட்டு – அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய மின் சாதனங்களை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை!

Wednesday, August 19th, 2020

நுரைச்சோலை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு மணித்தியாலம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்றுமுதல் நான்கு கட்டங்களாக எதிர்வரும் 4 – 5 தினங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் மாலை 6 மணி முதல் 7 வரை முதலாம் கட்டமாகவும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை 2 ஆம் கட்டமாகவும், 8 மணிமுதல் 9 மணிவரை 3 ஆம் கட்டமாகவும், 9 மணி முதல் இரவு 10 மணிவரை 4 ஆவது கட்டமாகவும் பிராந்திய ரீதியில் குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் தொடர்பில் முழுவிபரம் அடங்கிய அறிக்கையை இலங்கை மின்னசார சபை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், இவ் நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் பாவனையாளர்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த ஏனைய மின் சாதனங்களை பாவிப்பதை குறித்த சில தினங்களுக்கு தவிர்த்து கொள்ளுமாறும் வேண்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: