எல்லை தாண்டினால் உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்!

Saturday, July 1st, 2017

எல்லை தாண்டி மீன் பிடித்தால், தமிழக படகு உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மீன்வளத்துறை தொடர்பான விவாதம் வரும் 6ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள், குறைகள் ஆகியவை விவாதிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் இலங்கை மீன்வளத்துறை மந்திரி மஹிந்த அமரவீர, இலங்கையின் தென்பகுதியான திருகோணமலை, மட்டக்களப்பு உள்பட சில பகுதிகளில் உள்ள மீனவர்களின் குறைகள், பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை முடித்த பின்னர், மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மட்டக்களப்பு பகுதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்,

இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களின் 162 படகுகள் இலங்கை வசம் இருக்கிறது. முதற்கட்டமாக தமிழக மீனவர்களின் படகுகளில் 40 முதல் 80 படகுகள் விடுவிக்கப்படலாம் என்றார்.

அதையடுத்து, நிருபர்கள் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வருவதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ‘தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்து சிறை பிடிக்கப்பட்டால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, அவர்கள் வந்த படகு உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என்றும், அதுதொடர்பான சட்டத்தை 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

Related posts:

பொலித்தீன் கழிவுப்பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாமிடத்தில்!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்பு !
வர்த்தகர்களுக்கான அபராத தொகையை அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் புதனன்று நாடாளுமன்றுக்கு ...