மாசற்ற அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் -ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, March 19th, 2017

மாசற்ற அரசியல் மூலமே நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்றும் அதற்கான வல்லமை படைத்தவர்களின் கரங்களை பலப்படுத்தவேண்டும் என்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (19) மார்ச் 12 இயக்கம் நடத்திய மாசற்ற அரசியலுக்கான பிரஜைகளின் செயற்பாடு என்ற தொனிப்பொருளில் யாழ் ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டின்போது கலந்துகொண் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் –

இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டதன் பிற்பாடே மாசற்ற அரசியலை உருவாக்க முடியும் என்று இங்கு உரையாற்றிய அரசியல் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் அது தவறான கருத்தாகும்.

மாசற்ற அரசியலை முன்னெடுப்பதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். இதுவே எமது கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்.

70 ஆண்டுகால இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்றுவரை தீரா பிரச்சினையாக நீண்டு செல்ல காரணம் என்ன? மாசற்ற அரசியல் தலைமை ஒன்று இல்லாததன் காரணமாகவே தமிழ் பேசும் மக்கள் இத்துயர் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள்.

மாசற்ற அரசியல் தலைமையாக இருப்பவர்களிடம் அரசியல் பலம் இல்லை. மாறாக மாசு படிந்த கட்சித் தலைமைகளிடமே மீண்டும் மீண்டும் அரசியல் பலம் இருந்து வருகின்றது.

தீர்வுகாணவேண்டும் என்ற அக்கறையோ ஆற்றலோ இல்லாதவர்கள் மாசற்ற தலைமையாக ஒருபோதும் இருக்கமுடியாது.

ஆகவே மார்ச் 12 இயக்கத்தின் விளிப்புணர்வு பரப்புரைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும். வாக்களிக்கும் உரிமையின் வலிமையை மக்களுக்கு உணர்த்தவேண்டும்.

தமது வாக்குரிமையை மக்கள் என்று சரிவரப்பயன்படுத்தி மாசற்ற அரசியல் கலாச்சாரம் ஒன்றை கைதூக்கிவிடுகின்றார்களோ அப்போதுதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோருடன் பலதரப்பிட்ட அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொது அமைப்பகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

17353103_635301913335339_5150189674348673618_n

Related posts: