தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை – முல்லைத்தீவு மாவட்டத்தில் 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிப்பு!

Sunday, December 17th, 2023

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த பகுதியிலுள்ள குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகளிற்குள் வெள்ள நீர் புகுந்ததையடுத்து குறித்த பிரதேச மக்களை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்று முறிப்பு,பூவரசங்குளம், விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 283 குடும்பங்களை சேர்ந்த 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு , கனகரத்தினபுரம், காதலியர்சமனங்குளம் ,தண்டுவான்,ஒட்டுசுட்டான் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 166 குடும்பங்களை சேர்ந்த 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை , தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 44 குடும்பங்களை சேர்ந்த 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான் ,மல்லாவி,யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 104 குடும்பங்களை சேர்ந்த 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளன

மேலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம், மாணிக்கபுரம்,உடையார்கட்டு வடக்கு,உடையார்கட்டு தெற்கு மற்றும் வள்ளிபுனம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 283 குடும்பங்களை சேர்ந்த 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள குளங்களுக்கான நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தில் இருப்பதால் தாழ் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: