உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி!

Saturday, July 8th, 2017

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க எதிர்பார்த்துள்ள அதேவேளை, 25 சதவீதம் பெண் உறுப்பினர்களை உள்வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து வினவப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அமைச்சரவை இணைப்பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக கருத்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய எல்லை முறைமை, எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்ற அடிப்படையிலேயே திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்களுடனான அடுத்த கூட்டத்தின் போதே  இத்திருத்தத்தை எப்போது முன்வைக்க வேண்டும் என தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: