மிகப்பெரிய கொள்ளளவுடைய பாரம் தூக்கி இலங்கையில் – 42 பாரவூர்தியில் உதிரிபாகங்கள் இடமாற்றம்!

Monday, March 20th, 2023

இலங்கை கொள்வனவு செய்த மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட பாரம் தூக்கி கிரேன் இயந்திரம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் கடந்த வாரம் இறக்கப்பட்டுள்ளது.

750 தொன் தூக்கும் திறன் கொண்ட இந்த கிரேன், முதலில் மன்னாரில் காற்றாலை மின் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிக்கப்படுகின்றது

ஜேர்மனில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பாரம் தூக்கி கிரேன் ஜப்பானில் பயன்படுத்தப்பட்டு, தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

1000 தொன் உதிரிபாகங்களைக் கொண்ட இந்த பாரந்தூக்கி கிரேன் இயந்திரம் ஒரே நாளில் தரைக்கு இறக்கப்பட்டதாவும், அவை 42 பாரவூர்திகளுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்பின்னர், அவை இரண்டு நாட்களில் தரைவழியாக மன்னாரில் உள்ள காற்றாலை செயற்றிட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: