அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஏனைய குடும்பங்களுக்கும் நஷ்டஈட்டு!

Monday, October 23rd, 2017

கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள மற்றும் மண் சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரம சிஙக தொவித்துள்ளார்.

உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் சில அச்சு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு நாட்டின் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை குழப்ப முயற்சி செய்கின்றன என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேச செயலத்திற்குட்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈட்டுக்கு கொடுப்பனவுகளை வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் பிரதமர்  ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் பொழுதே பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

வெள்ள மற்றும் மண் சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 336 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. 21 மாவட்டங்கள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டன. இந்த வருடம் வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு 130 கோடி ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் நஷ்டஈடுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட ஏனைய குடும்பங்களுக்கு விரைவில் நஷ்டஈட்டு கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts: