உக்கிரமடையும் உக்ரைன் போர்! முதல் தடவையாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் களத்தில்!

Saturday, April 9th, 2022

உக்ரைனில் ரஸ்யா ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக அந்த நாட்டுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு அனுப்பபப்பட்டுள்ளது

ஸ்லோவாக்கியா தனது முழுமையான எஸ்-300 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது ரஸ்;யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் நாட்டின் வான் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரொய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கடந்த பெப்ரவரியில் ரஸ்யா, உக்ரைன் மீது படையெடுத்த பின்னர், ஒரு நாடு உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை அனுப்பிய முதல் சந்தர்ப்பம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில், புட்டின் ஆட்சியின் ஆக்கிரமிப்பிலிருந்து முடிந்தவரை பல அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற இந்த பாதுகாப்பு அமைப்பு உதவும் என்று தாம் நம்புவதாக ஸ்லோவாக்கியாவின் பிரதமர் எட்வார்ட் ஹெகர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு இந்த அமைப்பை நன்கொடையாக வழங்குவது “ஸ்லோவாக்கியா ஒரு ஆயுத மோதலின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதன் அர்த்தமல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்லோவாக்கியா, அண்மையிலேயே அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை அமைப்பைப் பெற்றுக்கொண்டது.

மற்றொரு தரையிலிருந்து ஏவப்படும் வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை நேட்டோ உறுப்பினர்களான ஜெர்மனி மற்றும் நெதர்லாந்திடம் இருந்து ஸ்லோவாக்கியா பெற்றுக்கொண்டது.

000

Related posts: