ட்ரம்பின் தடை உத்தரவுக்கு ஆப்பு ! அமெரிக்காவுக்கு ஆபத்தாம்!!

Sunday, February 12th, 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் சிரியா உள்பட 7 முஸ்லீம் நாடுகளின் குடிமக்கள் மற்றும் அகதிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ட்ரம்ப்பின் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதன்பின், கடந்த 4-ம் தேதியில் இருந்து தற்போது வரை 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், 4-ம் தேதி தொடங்கி இரண்டே நாட்களில் ட்ரம்ப் தடை விதித்த 7 நாடுகளில் இருந்து மட்டும் சுமார் 3,000 பேர் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை அமெரிக்க உள்துறை பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த 2016-ம் ஆண்டு இதே கால இடைவெளியில் 1,817 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘நமது சட்ட அமைப்பு உடைந்து விட்டது. சந்தேகத்திற்குரிய ஏழு நாடுகளிலிருந்து அகதிகளாக தஞ்சம் கேட்டு வருபவர்களில் 77 சதவிகிதம் பேர் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது’ எனத் தெரிவித்துள்ளார்.

trump

Related posts: