அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், 52 வீத கட்டில்கள் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது!

Wednesday, January 19th, 2022

நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், தற்போது 52 வீத கட்டில்கள் கொவிட் வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தை விட தற்போது ஒக்சிஜன் வழங்க வேண்டியுள்ள கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும், ஆனால் இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடனும் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் முக்கியம்டு என்று சுகாதார அமைச்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் தேவையான சட்ட வரைபுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: