அடுத்த வாரம்முதல் வரம்பற்ற இணைய டேட்டா – தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு!

நுகர்வோருக்கு வரம்பற்ற இணைய டேட்டா பொதியை, அடுத்த வாரம்முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்காக, அனைத்து இணைய இயக்குநர்களுக்கும் கடந்த முதலாம் திகதி ஒன்றுகூடி இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தொகுப்புகளை மதிப்பிடும் பணிகள் தற்போது இடம்பெறுவதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் புதிய டேட்டா பொதிகளுக்கு அமைவாக அறவிடப்படவுள்ள கட்டண விபரங்களும் தற்போது திட்டமிடப்பட்டு வருவதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திடீர் அனர்த்த நிதியுதவியாக ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கு நிதி!
வியாழனில் உயிரினங்கள் வாழ முடியும்என ஆய்வில் தகவல்!
பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர் - பொது பாதுகாப்பு அமைச்சர...
|
|