வியாழனில் உயிரினங்கள் வாழ முடியும்என ஆய்வில் தகவல்!

Wednesday, February 28th, 2018

குதிய ஆய்வின் மூலம் வியாழன் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கிரகத்தின் துணைக்கிரகமான யூரோப்பா முழுவதும் ஐஸ்கட்டியால் ஆனது. அண்மையில் இங்கு பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் யூரோப்பா துணை கண்டம் பற்றிய தகவல்கள் பூமியுடன் ஒத்துப்போவதை கண்டறிந்தனர்.

இந்நிலையில் தென்ஆபிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் அருகே போங்யங் தங்க சுரங்கத்தின் 2.8 கி.மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சூரிய ஒளிபடாததண்ணீரில் பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வதும் கதிரியக்கங்கள் ஏற்படுவதும் தெரியவந்துள்ளன.

யூரோப்பா துணைக் கிரகத்தின் நிலப்பரப்பிலும் இதே போன்ற நிலை உள்ளது.

அங்குள்ள நிலமேற்பரப்பில் ஐஸ்படுகையின் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் கடல் போன்ற தண்ணீர் மறைந்துள்ளது. அதில் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கலாம் என புதிய ஆய்வில்கருதப்படுகிறது.

Related posts: