தரமற்ற உணவு வழங்குவதாக வரும் செய்தியில் உண்மையுமில்லை – கோப்பாய் கல்வியியற் கல்லூரி !

Saturday, June 2nd, 2018

எமது உணவு விடயத்தில் விரிவுரையாளர் உட்பட எவரதும் தலையீடுமில்லையென கோப்பாய் கல்வியியற் கல்லூரியின் உணவு குழுவிலுள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் எமக்கு முறையாக உணவு வழங்கப்படவில்லையென குறிப்பிட்டு வெளியான செய்தி குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பில் கல்லூரியிலுள்ள உணவு குழு மாணவர்கள் தெரவிக்கையில்,

எமக்கு முறையான தரமான உணவு வழங்கப்படவில்லையென  செய்தி வெளியாகியுள்ளது.

விடுதி மாணவர்களுக்கான உணவை  விடுதியிலுள்ள மாணவர்களின் விருப்பு வெறுப்புக்கு அமைய மாற்றி அமைக்கப்படுகின்றது. உணவு தொடர்பில் உணவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு மாணவர்களும் 10 மாணவிகளும் உள்ளனர். இந்த குழுவிலுள்ள நான்கு மாணவர்கள் ஒரு தவணை முடிவில் மாற்றப்படும் அதேநேரம் மாணவிகள் 10 பேரும் மாதம் ஒரு தடைவ மாற்றப்படுகின்றனர்.

உணவு குழுவிலுள்ள மாணவர்களே மாணவர்களின் உணவுகளை தெரிவு செய்வதுடன் மரக்கறி உட்பட ஏனையவைகளை கொள்வனவு செய்கின்றனர்.

அத்துடன் சமையலுக்கான பொருட்களை நாமே எடுத்து வருகின்றோம். இந்நிலையில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதற்கு இடமில்லை. எமக்கான மீன் மன்னாரில் இருந்து வருவதாகக் கூறப்படுவதில் உண்மையுமில்லை. நாம் அரியாலையிலுள்ள மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை நிலையத்திலிருந்து மீன்களை வாங்குவதாகவும் மாணவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

Related posts: