சட்டவிரோத மணல் அகழ்வு; தர்மபுரத்தில் ஐவருடன் உழவு இயந்திரங்களும் பறிமுதல்!
Wednesday, January 26th, 2022
கிளிநொச்சி – கல்மடு குளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதற்கமைய, இராணுவத்தினரின் உதவியுடன் பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவரை கைதுசெய்துள்ளதுடன் மணல் அகழ்விற்கு பயன்படுத்திய 5 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலுவடைகின்றது காற்று! - வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
சர்வதேச நீதி மன்றத்தின் தீர்ப்பு இந்திய பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றியா ...?
தொழில் வழங்குவதாக பண மோசடி - கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!
|
|
|


