வலுவடைகின்றது காற்று! – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Friday, May 20th, 2016

நாடுமுழுவதும் இன்று புயல்காற்று வீசக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் மக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

குறிப்பாக இலங்கையைச் சுற்றிலும் உள்ள கடல்பிராந்தியத்தில் கடுமையான காற்றும், பாரிய அலைகளும் காணப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மத்திய, தென், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஓரளவுக்கு கடுமையான காற்று வீசக்கூடும்.

கொழும்பு முதல் மன்னார் வரையான மேற்குக்கரையோர கடல் பிராந்தியத்தில் மிகவும் ஆக்ரோசமான காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிரதேசத்திலும் காற்றின் தாக்கம் பலமாக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இப்பிரதேசங்களில் காற்று மணித்தியாலமொன்றுக்கு அறுபது மைல் வேகத்தில் வீசக்கூடும் எனவும் இதனால் இன்றைய தினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இலங்கையின் வடமேற்குப் பிராந்தியத்தில் இன்றும் ஓரளவு கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:


ஆயுதப் பாசறையில் ஒன்றாக இருந்த நாம் மீண்டும் அரசியல் பாசறையில் ஒன்றிணைந்துள்ளோம் - கன்னி உரையில் ஜெ...
இலங்கை - இந்திய மீனவர்களது பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வு - 'லைசென்ஸ்’ முறை ஒன்றை நடைமுறைப்படுத்துவத...
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அடுத்த வாரம் இலங்கை விஜயம் - கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதல...