சர்வதேச நீதி மன்றத்தின் தீர்ப்பு இந்திய பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றியா …?

Tuesday, May 23rd, 2017

இந்தியாவின் குல்புஷன் யாதவிற்கு பாகிஸ்தானில் அறிவிக்கப்பட்ட  மரணதண்டனையை நிறுத்தி வைக்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டதானது  இந்தியாவின் இராஜதந்திரதிற்கு கிடைத்த  வெற்றி, மோடியைப் பொறுத்தவரை இது அரசியல் ரீதியில் மக்களுக்கான வெற்றி.

குல்புஷனினுக்கு பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்திவைக்குமாறு நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் கடந்த வியாழனன்று தீர்ப்பளித்தது.

இதுவரைகால வரலாற்றில் பாகிஸ்தானுடனான இருதரப்புப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச அரங்குகளை நாடுவதில் தயக்கம்காட்டிவந்த இந்தியா அந்தத் தயக்கங்களை ஒதுக்கிவைத்துவிட்டு சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதற்கு அனுமதித்துள்ளது. இந்தியாவின் அதிகரித்த அளவிலான அரசியல் மூலதனங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, அந்நாட்டின் பிரதமரும் அமைச்சரவை சகாக்களும் சர்வதேச நீதிக்கான நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும் முடிவை,தீர்ப்பு குறித்து குறைந்த எதிர்பார்ப்புடனோ, எத்தகைய தூரநோக்கமுமன்றியோ அவ்வளவு எளிதிதாக எடுத்திருக்கமாட்டார்கள்.

ஹேய்க் சர்வதேச நீதிக்கான நீதிமன்றத்தின் அமர்வுகள் எதுவும் தற்போது இடம்பெறாத நிலையிலும் இந்திய சிரேஷ்ட தூதுவர் ஹரிஷ் சால்வே கடந்த மே 8ஆம்திகதி அங்கு சென்று தனது விண்ணப்பத்தை  நீதி மன்றத்தின் பதிவாளரிடம் கையளித்ததுடன் 20நிமிடங்கள் வழக்கின் தன்மை குறித்தும் அவசர அவசியம் குறித்தும் சுருக்கமாக அவருக்கு எடுத்துரைத்துள்ளார். அதில் உள்ள ஆபத்துக்கள் கரிசனைக்குரியதாக இருந்தன. சர்வதேச நீதிக்கான நீதிமன்றம் இந்தியாவின் விண்ணப்பத்தை எளிதில் நிராகரித்திருக்க முடியும். இருப்பினும் அது வாய்மூல விசாரணைக்கு இணங்கியதுடன் இந்தியாவிற்கு ஆதரவாக எத்தகைய உறுதி மொழியையும் உடன் அளிக்கவில்லை.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதித்துறைக்கு பாகிஸ்தானின் தண்டனை விவகாரத்தை எடுத்துச் செல்வதென்ற முடிவு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது இந்த நகர்வு குறித்து இறுதி முடிவெடுப்பதானது இருதரப்பு பிரச்சினையை பலதரப்புப் பிரச்சினையாக மாற்றிவிடக்கூடும் என்றும் பாகிஸ்தான், காஷ்மீர்  பிரச்சினையில்  இதனை தனது வாய்ப்பாகப் பயன்படுத்தும் என்றும் கருதப்பட்டது. சர்வதேச நீதி மன்றம் அமுலாக்கத் திறமையெற்றது என்றும் அதனால் இந்தியாவிற்கு எதுவித இலாபமும் இல்லை என்றும் பாதிப்புகளே அதிகம் என்றும் வாதிடப்பட்டது. இதன் மூலம் இந்தியா தனது பாதுகாப்பிற்கு சர்வதேச கதவுகளைத் திறந்துவிடுகிறது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனால் வியாழக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பானது இந்தியாவின் ராஜதந்திர நிலையை உயர்த்திப் பிடிப்பதாய் அமைந்ததுடன், அது குறிப்பிடத்தக்க அளவு மோடியின் கரங்களை வலுப்படுத்துவதாகவும் இருந்தது. தீர்ப்பினை வழங்குகையில் சால்வேயின் தற்காலிக வழிமுறைகளுக்கான வாதத்தை மெச்சிய நீதிபதிகள் பாகிஸ்தானின் எதிர்ப்புக்களை ஒதுக்கித்தள்ளியதன் மூலம் சர்வதேச நீதிக்கான நீதிமன்றம் மோடியிடம் ஒரு அரசியல் வெற்றிக்கான அதிர்வலையைக் கொடுத்துள்ளதுடன் முழுமையான மூலோபாய பெறுபேறுகளையும் வழங்கியுள்ளது.

Related posts: