பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர் – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவிப்பு!

Monday, December 25th, 2023

நாடளாவிய ரீதியில் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை காவல்துறையினர் வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

அவர்களில் சுமார் 135 பேர் சிறையில் இருந்தபோதும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரலாற்றில் முதல் தடவையாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புகைப்படக்கருவி அமைப்பை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கும் தேடப்படும் குற்றவாளிகளின் கண்காணிப்பை மேம்படுத்துவதை நோக்கமாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இணைந்து இலங்கை முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியலைத் தொகுத்துள்ளனர்.

இந்த முயற்சிகளின் மூலம் கைது செய்யப்பட்ட ஏராளமானவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


காப்பாளர்களுக்கு நியமனம் வழங்கத் தவறின் சகலரும் ஒரே நாளில் பணியிலிருந்து விலகுவர் - தொடருந்துக் கடவை...
தொடர்ந்தும் தவறிழைத்தால் கடும் முன்னெடுக்கப்படும் - சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் ...
அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் இறக்குமதி செய்யப்படும் - வர்த்தகத்துறை அமைச்சர் எச்சரிக்கை!