ஊர்காவற்றுறை பிரதேசத்தை சுகாதாரம் மிக்க எழில் மிகு பிரதேசமாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும் – ஊர்காவற்றுறை தவிசாளர் ஜெயகாந்தன்!

Tuesday, April 24th, 2018

ஊர்காவற்றுறை பிரதேசத்தை சுகாதாரம் மிக்க எழில் மிகு பிரதேசமாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அந்த வகையில் எமது பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளும் பிரதேச சபையின் நிகழ்ச்சித் திட்டத்தின் கிழ் சிரமதானம் மூலம் சுத்தம் செய்து தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றது என ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் – எமது பிரதேச சபையில் சுத்தமான பிரதேசம் என்ற தொனிப்பொருளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக  கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணிகளின் இரண்டாம் கட்டம் இன்று (24) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டுதலில் நாம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்ததன் பயனாகவே இப்பகுதி பல வகைகளிலும் முன்னேற்றம் கண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாது இப்பகுதி மக்களது வாழ்வியலிலும் பல மாற்றங்களை உருவாக்கி கொடுத்துள்ளோம். இதன் பெறுபேறாகத்தான் இன்றும் இப்பகுதி மக்கள் எம்மிடம் இப்பகுதியின் ஆட்சி அதிகாரங்களை தந்துள்ளனர்.

அந்தவகையில் மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழவேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்தப் பகுதியின் சுகாதாரத்தை நாம் உறுதிப்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

Related posts:

புங்குடுதீவு  இறுப்பிட்டி கிராமத்தின் அபிவிருத்திக்காக முழுமையாகப் பாடுபடுவோம் - வேலணை பிரதேச தவிசாள...
தேசிய கட்சிகளை விட பிராந்திய கட்சிகளே வாக்கு வங்கிகளை பலமாகக் கொண்டுள்ளன - களப்பணியாற்ற தயராகுங்கள்...
அமைச்சர் டக்ளஸின் வடக்கு கடற்படுகையை பாதுகாக்கும் முயற்சிக்கு வலிகிழக்கு பிரதேச சபையில் மகத்தான வரவே...

அமரர் பரமநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரிய...
வல்லவர்களின் கையில் ஆட்சியதிகாரம் இருந்திருந்தால் வடக்கு மக்களின் வாழ்வியலுடன் அரசியலுரிமையையும் வெற...
அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி...