வடமராட்சி கடற்றொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா ? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 9th, 2019

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கடற்பகுதியிலே சுழியோடி மூலமாக கடலட்டை பிடிக்கின்ற தொழிலில் பகல் வேளைகளில் ஈடுபடுவதற்கென அம் மாவட்டத்தைச் சாராத சுமார் 400 கடற்றொழிலாளர்களின் படகுகளுக்கு கடற்றொழில் திணைக்களத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் இரவு வேளைகளிலும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அனுமதிக்கப்பட்ட தூரத்திற்கு செல்லாது கடற்கரையினை அண்டிய பகுதிகளிலும் தொழில் செய்து வருவதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர் சங்கங்கள் முறைப்பாடு செய்துள்ளன.

மேற்படி கடலட்டைத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களால், தங்களது வலைகள் பாதிக்கப்படுவதாகவும், அதே நேரம் தங்களது வாழ்வாதாரமான மீன்கள் அப்பகுதிகளில் தங்காது கலைந்து செல்வதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிக் கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் ஊடாக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலை நீடிக்குமானால், அது தேவையற்ற வகையிலான முரண்பாடுகளை இரு சமூகத்தினரிடையேயும் ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உருவாகலாம்.

எனவே, யாழ்ப்பாண மாவட்ட வடமராட்சி கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கின்ற வகையில் மேற்படி கடலட்டைத் தொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்கள் அப்பகுதிக்குள் தொழில் செய்வதைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

அதேபோன்று நாட்டின் அந்தந்த பகுதிகளின் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அவர்களது தொழில் உபகரணங்கள் பாதிக்கக் கூடிய வகையில், வேறு பகுதிகளைச் சார்ந்த கடற்றொழிலாளர்கள் தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதிகள் வழங்காதிருக்க நடவடிக்கை எடுக்க முடியுமா?

எனது மேற்படி கேள்விகளுக்குரிய பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் பி. ஹெரிசன் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:

தமிழ் நாட்டில் இருந்து இலங்கை திரும்புவதற்காக சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டுவரும் இலங்கை அகதிகளுக்கான...
வடக்கில் காட்டு யானைகளினதும் குரங்குகளினதும் தொல்லைகள் அதிகரித்துவிட்டன. தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட...
தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் சந்தேகத்தை தருகின்றன - அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் டக்ளஸ் எ...

தமிழ் நாட்டில் இருந்து இலங்கை திரும்புவதற்காக சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டுவரும் இலங்கை அகதிகளுக்கான...
10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தில் வடக்கு - கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளது விகிதா...
நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் 2016.05.20 ஆந் திகதி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்...