செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே!

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே சமாதான நட வடிக்கைகளின் இன்றைய நிலை தொடர்பாக எனக்கு முன்னர் இங்கு பேசிய பலர் தங்களுடைய கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள்.அதேபோல தமிழ் மக்களது பார்வையிலான கருத்துக்களையும் எனது கட்சியின் கருத்துக்களையும் நான் இங்கு சொல்ல விரும்புகின்றேன்.அதேநேரத்தில் தற்போது சபைக்குத் தலைமைதாங்குகின்ற கௌரவ உறுப்பினர் அவர்கள் எனது பேச்சின்போது தனது ஆசனத்;தில் இருந்துகொண்டு உற்சாகமூட்டுவார் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஏமாற்றம்தான் பரவாயில்லை.

எமது மக்களின் சமாதானக் கனவுகள் இருண்ட சிறைக்கதவுகளுககுள் இப்போது விலங்கிடப்பட்டுள்ளன. பூட்டிய சிறையின் திறவுகோலைத் தாங்களே திட்டமிட்டுத் தூரத் தொலைத்துவிட்டு இங்கு சமாதானக் கனவுகளை அவர்களே தேடிக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் சமாதானத்தில் இன்றைய நிலை. சமாதானத்தின் திறவுகோலை யார் திட்டமிட்டுத் தொலைத்துவிட்டார்களோ அவர்களே அதைத் தேடிக் கொண்டிருக்கும் வேடிக்கையானதும் விந்தையானதுமான  நிகழ்வுதான் நடந்து கொண்டிருக்கிறது. கோயில் திருவிழா ஒன்றின் போது ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு திருடன் ஒருவன் தப்பி ஒடிக் கொண்டிருக்கிறான்.

அவ்வேளையிலே திருடனைப் பிடியுங்கள் என்ற சப்தமிட்டவாறு உண்மையாகவே திருடனை துரத்தும் மக்களும் கூட்டத்தில் திருடர்களும் சேர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பொழுதுபோக்கிற்காகவும் திருடனை துரத்துகிறார்கள். இவ்வாறே இன்று சமாதனத்திற்கு எதிரானவர்களும் சமாதானம் சமாதானம் என்ற கோஷங்களை எழுப்பியவண்ணம் சமாதானத்தை தேடுவதாகக் கூறிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று சமாதானத்தின் எதிரிகள் யார்? எமது மமது மக்களின் சமாதானக் கதவுகளை உடைத்துப் போட்டவர்கள் யார்? சமாதானத்தை நோக்கிய பயணத்தில் அடியெடுத்து வைக்கும் நம்பிக்கைகளின் கால்களுக்குச் சங்கிலி பிணைத்து நகரமுடியாது கட்டி வைத்திருப்பவர்கள் யார்?

ஒரு காலத்தில் செல்வா ஒப்பந்தம் எழுதப்பட்டது. டல்லி – செல்வா ஒப்பந்தம் எழுதப்பட்டது. அவ்வொப்பந்தங்கள் ஈரம் காய்வதற்கு முன்பாகவே அவை கிழித்தெறியப்பட்டன. அது ஒரு காலம்.பேரினவாதக் கட்சிகள் என அன்று கூறப்பட்ட கட்சிகளால் எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் அதே பேரினவாத எதிர்க்கட்சியின் எதிர்ப்பலைகளினால் கிழித்தெறியப்பட்டன. அந்தப் பேரினவாதத்துக்கெதிராகவே நாமும் ஆயுதமேந்திப் போராட்டக் களத்தில் நின்றிருந்தோம். எமது மக்களின் உரிமைகளை அடைவதற்காகவே எமது தேசத்தின் விடுதலையை அடைவதற்காக எமது அரசியல் உரிமைகளுக்காக நாம் ஆயுதமேந்திப் போராடியிருக்கின்றோம்.

உண்மையிலே பேரினவாதம் தான் எமது மக்களின் உரிமைகளுக்கும் சமாதானக் கனவுகளுக்கும் அன்று பிரதான தடையாக இருந்தது. ஆனால் இலங்கை – இந்திய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டதென்பதை நான் இங்கு மீண்டும் மீண்டும் கூறிவைக்க விரும்புகின்றேன். எமது மக்களின் உரிமைகளை மறுப்பவர்கள் யார்? என்ற விடயத்தில இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முன் மற்றும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின் என இரண்டு அத்தியாயங்கள் இருக்கின்றன.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய வரலாற்றின் படி பேரினவாதம் தான் எமது மக்களின் சமாதானக் கனவுகனைச் சிதைத்த வந்ததென்பது உண்மை. ஆனால் அதற்குப் பிந்திய வரலாற்றில் விடுதலை என்றும் சமாதானம் என்றும் தமிழ்த் தேசியம் என்றும் கூறிக்கொண்;டு யார் துப்பாக்கிகளுடன் திரிகிறார்களோ? அவர்களே எமது மக்களின் சமாதானக் கனவுக்கு பிரதான தடையாக இருந்து வருவதைக் காணலாம். கைகளில் சமாதானப் புறாவை ஏந்திக்கொண்டு உள்ளத்தில் போலி வேடமணிந்து வரும் புலிகளுக்குப் புகழ்பாடும் கூட்டத்தினரும் சமாதானத்திற்குத் தடையாகவே இருக்கின்றனர்.

இலங்கை  – இந்திய அரசுகளால் தமிழ் பேசும் மக்களுக்கென உருவாக்கப்பட்டதுதான். வட – கிழக்கு மாகாணசபை அந்த மாகாண சபையுடன் ஈ.பி.டி.பி. எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதற்காக நாம் அதனை எதிர்க்கவில்லை. அதிலுள்ள நடைமுறைத் தவறுகளை திருத்திக் கொண்டு இதை ஓர் உன்னத இலக்கை நோக்கி நகர்த்தியிருக்க முடியுமென ஈ.பி.டி.பி. நம்பியிருந்தது.

ஆனால் புலிகள் என்ன செய்தார்கள்? அந்த மாகாணசபைகளைக் கலைக்க வேண்டுமென கங்கணங்கட்டி நின்றதன் மூலம் சமாதானக் கனவுகளைச் சிதறடித்தார்கள். தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கின்றோம் என சுதுமலைப் பொதுக்கூட்டத்தில் கூறிய பிராபாகரன் இந்திய படையை வரிந்து கட்டிச் சண்டைக்கு இழுத்ததன் மூலம் எமது மக்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்தார். கபடத்தனமாக தமிழனும் சிங்களவனும் இந்த மண்ணின் மைந்தர்கள் எனவும் இந்தியப் படைக்கு இங்கு என்ன வேலை எனவும் கூறி அவர்களை வெளியேறச் சொன்ன புலிகள், பின் நாட்களில் ராஜிவ் காந்தியைக் கொன்றளித்து இந்தியாவை எமது மக்களின் பகைமை நாடாக ஆக்கிக் கொண்டனர்.

அப்பொழுது புலிகள் பிரேமதாச அரசுடன்; பேசிக் கொண்டார்கள். அதன் பின் என்ன நடந்தது? யாருடன் பேசுவதாக கைக் குலுக்கி நின்றார்களோ அவரது உயிரைப் பறித்தன் மூலம் எமது மக்களின் சமாதானத்துக்கு விரேதமாகப் புலிகள் நடந்து கொண்டனர். அதன் பின்னர் 1994ல் இன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களுடன் பேசினார்கள். யுத்த நிறுத்த சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி புலிகள் தாமாக வரிந்துகட்டி படையினரை யுத்ததிற்கு இழுத்தார்கள். அதன்மூலம் சமாதானத்துக்கான வாய்ப்பினை புலிகளே சிதறடித்தனர். இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறிக் கொண்டு காட்டுக்குள்ளிலிருந்து நாட்டுக்குள் வந்த புலிகள் நாட்டுக்குள்ளேயும் காட்டுத் தர்பார் நடத்தி வருகின்றனர்.

2002ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கைப் படையினர் தமிழ் மக்கள் மீது யுத்தத்தைத் தொடுத்தார்களா?இல்லையே! பருத்தித்துறை தொடங்கி பொத்துவில் வரை வாழும் தமிழ் பேசும் மக்கள் சந்தோசமாகவும் இயல்பாகவும் வாழத் தொடங்கினர். ஆனால் யுத்த காலத்தை விட சமாதான காலம் என்பது மோசமானதெனத் தமிழ் பேசும் மக்கள் அனுவபப் படவும் அந்த முடிவு வரவும் யார் காரணம்? உலகம் ஒன்றுபட்டு நின்ற ஹிட்லரின் அராஜகத்தை முறியடித்த 60வது வருடத்தை இப்போது நாம் நினைவு கூருகின்றோம். ஆனால் ஹிட்லரின் வாரிசு ஒன்று தமிழ் மக்களுக்காக வளர்ந்து வருகின்றது. எந்த மாற்றுக் கருத்துக்களையும் அங்கீகரிக்க முடியாத பொறுத்துக் கொள்ள முடியாத பாஸிசம் தலைவிரித்தாடுகிறது. சமாதானத்தின் பெயரால் தமிழ் தேசியத்தின் பெயரால் புதிய ஹிட்லருக்கு பலம் சேர்க்கபட்டிருக்கிறது. நவீன மனித சமுதாயத்தில் கொலை செய்வதற்குப் பிரபாகரனுக்கு தமிழ் மக்கள் பெயரில் லைசைன்ஸ் வழங்கியது யார்? தமிழ் மக்களைத் தமிழர்களே கொலை செய்ய வைத்தது. தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களை நிம்மதி இழக்கச் செய்தது யார்? புலிகள்தானே!

சமாதானத்தின் பெயரால் காட்டுக்குள் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்த புலிகள் அரசியல் பணி செய்ய வந்ததாகக் கூறப்பட்து புலிகளின் அரசியல் படையில் சேர்க்கப் பிடிப்பது.வரியின் பெயரால் மக்களிடமிருந்து கப்பம் வசூலிக்கும் சுரண்டலை இலகுபடுத்தியது. தாம் காட்டுக்குள் இருந்தபோது அச்சுறுத்த முடியாமல் இருந்தவர்களின் வீட்டுக் கதவைத் தட்டிக் காரியம் சாதிப்பது மாற்று ஜனநாயகச் சக்திகளை பொதுமகனைக் கொலை செய்வது மக்களின் பணத்தில் உல்லாசமாக உலகைச் சுற்றி வருவது புலம்பெயர்ந்தவர்களிடம் பொய்களைச் சொல்லி பணம் கறப்பது என்பவையும் சமாதானத்தின் பெயரால் புலிகள் செய்த அரசியல் பணிகள். புலிகள் ஆயதங்களை கைவிடாத மனநோயாளிகள் ஆயுத ஆட்சிக்கு வழிபாடு நடாத்தும் யுத்த வெறியர்கள் பிரபாகரன் ஒர் அரசியல் குற்றவாளி.

யுத்ததின் பெயரால் ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களை அழித்த பிரபாகரன் சமாதானக் காலகட்டத்தில் மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டிய நபர். புலிகள் இன்றைய நவீன மனித சமுதாயத்தின் பண்புகளுக்கும் அரசியல் சமூக வழிமுறைகளுக்கும் எதிரான சக்தி என்பதில் எமக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இன்றுகூட புலிகள் தமது வழிமுறைகளை பாஸி சத்தை கைவிட வேணடும் என்றே நாங்கள் வலியுறுத்துகின்;றோம்.

தமிழ் மக்களுக்கு மத்தியில் புலிகளை ஜனநாயக வழியில் சந்திப்பதற்கு நாங்கள் தயாரகவுள்ளோம். புலிகளுக்குத் தமிழ் மக்களின் மீது தமிழர் அரசியலின் மீது நம்பிக்கை இருக்குமானால் ஜனநாயக சூழலில் எம்மைச் சந்திப்பதற்குத் தயாராக வரட்டும்! மக்களின் தீர்ப்பை மாண்புடன் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் அவர்கள் மக்களின் பெயரால் மோசடித் தளமாகத் தங்களுக்குத் தாங்களே வாக்களிக்கும் தீர்ப்பளிக்கும் செயலினைக் கைவிட்டு நேர்மையுடன் எம்மை சந்திக்க வரவேண்டும்.(இடையீடு) இந்த விடயத்தைப் பேசி முடித்துவிட்டு வருகின்றேன். உங்களுக்குப் பதிலாக(இடையீடு) நடந்து முடிந்த பிறகு நீங்கள் கதையுங்கள்.

உங்களுடைய காலகட்டத்தில் தேர்தல் என்ன மாதிரி நடந்தது என்பதை வரலாறு சொல்லும். ஐPமுகு காலகட்டத்தில் தேர்தலுக்குக் கட்டுப்பணம் செலுத்த வேண்டிய நாட்களில் யாரும் போக முடியாது. கச்சேரிக்கு கிட்ட யாரும் போக முடியாது. அதாவது மீன் விற்கின்றவரோ மரக்கறி விற்கின்றவரோ தங்களுடைய காசைக் கச்சேரிக்கு கிட்டக் கொண்டு போக முடியாது. அளவிற்குத் தான் நீங்கள் தாபார் நடத்தினீர்கள். இன்றைக்கு என்ன செய்கிறீர்கள். அதை நடத்த முடியாத பட்சத்திலே புலிகளிடம் அடைக்கலமாகி சுய இலாப அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.(இடையீடு) தயவுசெய்து என்னைக் குறுக்கீடு செய்யாதீர்கள் நான் பேசி முடிந்த பிறகு நீங்கள் தாராளமாகப் பேசலாம். இல்லாவிட்டால் நீங்கள் பேசும் போது நான் குறுக்கிட்டு பதில் சொல்ல வேண்டி வரும்.(இடையீடு)

No,No, you did not ask for any clarification,No ,you never did.

Your are trying to disturb my speech Bacause you could not answer.you are trying to hide the facts.That is why you are trying to disturb my speech.

நாங்கள் புலிகளுடைய பாஸிச சர்வதிகாரத்திற்கு எதிராக மட்டும் அல்லர். புலிகளின் பாஸிசக் கட்டமைப்பை எதிர்க்கின்ற மக்களுக்கான ஒரு மாற்றுத் தலைமையினை ஏற்படுத்தவே EPD இன்று களத்தில் நிற்கின்றது. அதற்காக நீடித்ததும் நியாயமானதுமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துபவர்கள் நாங்கள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக எமது உயிர்களைக்கூட அர்ப்பணிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். நாம் எமது பயணத்தில் உறுதியான அரசியல் நிலைப்பாட்டினையும் செயற்பாட்டினையும் கொண்டிருப்பவர்கள்.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வின் ஊடாக வடக்கு – கிழக்குப் பிராந்தியத்துக்கான சமஷ்டி ஏற்பாட்டினை வலியுறுத்துபவர்கள் “மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி” என்பதே எமது கட்சியினதும் தமிழ் மக்களினதும் நிலைப்பாடாகும்.புலிகளின் ஆயுத அடாவடித்தனத்துக்குப் பயந்து தமிழ் மக்களை ஆளும் அதிகாரத்தினைப் புலிகளிடம் வழங்க முடியாது என்பதனைச் சிங்கள சமூகம் பொறுப்புடன் உணர்தல் வேண்டும். புலிகளின் பிரச்சினைக்கு ஒரு தீர்வும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வும் ஏற்பட வேண்டும். சிங்கள அரசியல் தலைமைகள் இவ்விரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பிவிடக்கூடாது.

இதனைத்தாம் நாம் நீண்ட காலமாக அரசியல் அரங்கில் வலியறுத்தி வருகின்றோம்.புலிகளுக்குத் தேவை யுத்தம். ஆனால் தமிழ் பேசும் மக்களுக்குத் தேவை கௌரவமான சமாதானம்,நிம்மதியான வாழ்வுக்கான அரசியல் தீர்வு. தினமும் மாற்று ஜனநாயக சக்திகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொலை செய்யும் புலிகளை வழிபாட்டுத் தெய்வங்களாக புலிகளுக்கு வால்பிடிக்கும் சிலர் முயன்று வருகின்றனர். இது மனித வரலாறு கண்டறியாத மாபெரும் ஏமாற்றுத்தனம். இதுவரை புலிகளினால் கொல்லப்பட்டவர்களுக்கு சமாதானத்தின் பெயரால் நாம் என்ன பதில் சொல்லப் போகின்றோம்? தமது உயிரை இன்னுயிரை ஈந்த அவர்களின் மனைவியருக்கு குழந்தைகளுக்கு சுற்றத்தவர்க்கு அவர்களை நேசித்தோருக்கு நம்மிடம் உள்ள பதில்தான் என்ன? புலிகளிடம் தமிழ் மக்களை அடிமைகளாக்குவதற்கு இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தை பயன்படுமானால், அந்நோக்கத்திற்காக அது தொடர்ந்தும் பயன்படுத்தபடுமானால் சமாதானம் என்பதன் உள்ளாந்த அர்த்தங்களுக்கு நாம் கேடு விளைவித்து வருகின்றோம். என்பதே யாதார்தமாகும்.

2002 பெப்ரவரியில் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒருவருக்கொருவர் பேதமின்றி கடந்தகால முரண்பாடுகளை மறந்து நெருங்கிவரத் தொடங்கினர்.மக்களின் ஆர்வம் யுத்தத்தின் மீதான வெறுப்பாக வெளிப்படத் தொடங்கியது மக்களின் இந்த மனமாற்றத்தை கண்ட புலிகள் தமது இருப்புக் குறித்துப் பெரிதும் அஞ்சினர். இதனால் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்குள் மோதலையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்த முடிந்தளவில் அனைத்துக் காரியங்களையும் செய்தனர். தமிழர்களுக்கு எதிரானவர்களாக சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் சித்தரிப்பதற்கு பெருமளவில் தமிழ் ஊடகங்களைப் புலிகள் பாவிக்கத் தொடங்கினர்.

இத்தகைய பணிகளுக்காக மக்களிடமிருந்து வரியின் பெயரால் கப்பமாக பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பணத்தை அள்ளி இறைத்தனர். ஆட்களைக் கடத்தினர். கொலை செய்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தினார்.குண்டு வீசினர். ஏனெனில் மக்கள் இன மத மொழி வேறுபாடுகள் கடந்து மனிதர்கள் என ஒன்றுபடுவது தமது இயக்கத்திற்கு வினையாக முடியும் என்பது புலிகளுக்கும் பிராபாகரனுக்கும் நன்கு தெரிந்த உண்மையாக இருக்கின்றது. முடியுமானவரை சிங்கள மக்களைத் தமிழ் மக்களின் எதிரிகளாகச் சித்தரிப்பதை யுத்த காலத்தில் மட்டுமல்ல சமாதான காலதிலும் புலிகள் தமது கொள்கையாகக் கொண்டிருந்தனர்.புலிகளின் பிரபல்யமான கவிஞர் புதுவை இரத்தினதுரை 2003ல் சமாதான காலத்தில் இப்படியொரு கவிதை எழுதினார்.

       “சிங்களத்தின் கணறுகள் யாவம் சீக்கிரத்தில் ஊற்றடைக்கும்

        சிங்களத்தின் கருப்பiயில் இனிக் கரு தங்காது”

இது தான் புலிகளின் சமாதானம் பற்றியவையா? சமாதான உடன்பாடு எட்டப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. எங்காவதொரிடத்தில் புலித்தலைமை இந்தச் சமதாதான பேச்சுவார்த்தையில் தமக்கு நம்பிக்கையுள்ளதென உளப்பூர்வமாக தெரிவித்தள்ளதா? என இச்சபையில் நான் கேட்க விரும்புகின்றேன். சமாதானத்துக்காக தமிழ் மக்கள உழைக்க முன்வரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான எதிர்கருத்தக்களையே கூறி தமிழ் மக்களின் வாழ்வை யுத்த சூழலுக்குள் வைத்திருப்பதற்குப் புலிகள் முயன்று வந்துள்ளனர்.

சமாதானத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையிலுள்ள காலத்தில் எமது 43 உறுப்பினர்களை நாம் இழந்துள்ளோம். எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தொடக்கம் ஆதரவாளர்கள் வரை புலிகளால் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற னர். சமாதானத்தின் பெயரால் துயரமிது. எமது சிரேஷ்ட உறுப்பினர் பாலநடராஜா ஐயரது கொலை தொடர்பாக பத்திரிகையாளர் டீ.பீ.எஸ்.ஜெயராஜ் “சண்டே லீடர்” பத்திரிகையில் எழுதிய  கட்டுரையில் தமிழ் மொழிபெயர்ப்பை இங்கே வாசித்துக் காட்ட விரும்புகின்றேன்.

சின்னபாலாவின் மரணத்துக்குச் சில வாரங்களுக்கு முன்னதாக அவரது முன்னாள் சகாவும் தற்போதைய புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமாகிய வே.பாலகுமார் கொழும்பில் வாழ்ந்த சின்னபாலவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஈ.பிடி.பி.யின் அரசியலில் இருந்து ஒதுங்குமாறும் முடிந்தால் வெளிநாடு செல்லுமாறும் வே.பாலகுமார் தனது பழைய நண்பருக்குப் புத்திமதி சொன்னார்.சின்பாலா உறுதியாக அதற்கு மறுப்புத் தெரிவித்தார். அங்கே அப்பொழுதே அவருடைய தலைவிதி நிர்ணயிக்கப்பட்டு விட்டது.எமதர்மன் தனது தூதுவர்களை கிங்கரர்களை – பாசக்கயிற்றோடு அனுப்பி சின்னபாலவின் உயிரை எடுப்பதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தமையை இவர்களது சம்பாஸனை குறித்து நின்றது.அந்நாள் ஆகஸ்ட் 16ந் திகதி வந்தது. மிலேச்சித்தனமாக மட்டுமல்ல.மிகக் கொடூரமாகவும் சின்னபாலவின் உயிர் பறிக்கப்பட்டது. அவர் தனது மனைவி ஜெகதீஸ்வரியையும் மூன்று புதல்விகளையும் விட்டுப் பிரிந்தார்.”

இதனை நீங்களும் அப்பத்திரிகையில் வாசித்திருக்கலாம்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி எமது தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதங்களைச் சமாதானத்தின் அர்த்ததைப் பலப்படுத்துவதற்காக நாம் கையளித்தோம். சமாதானமே எமது தற்காப்புக் கவசம் என நம்பினோம். ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன? என்னைக் கொல்வதற்குப் புலிகள் தற்கொலையாளியை அனுப்பினர். புலிகளின் கொலைவெறியில் இருந்து நான் தப்பினாலும் பல உயிர்கள் அநியாயமாகப் பலியாகின.

பிரபாகரன் சமாதானப் பேச்சவார்த்தைக்கு வந்ததன் அர்த்தம் இதுதானே? புலிகள் சமாதானத்தின் உண்மையான அர்த்ததைத் தொலைத்துவிட்டு “இருட்டுக்குள் கறுப்புப் பூனையைத்”  தேடிக்கொண்டிருக்கின்றார்கள் என்றுதான் நமது கட்சி கருதுகின்றது.சமாதானம் என்பது புலிகளின் அகாரதியிலே இலங்கை அரசியல் தலைமைகளும் பாடுபட வேண்டும் யாதார்த்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சமாதானம் தொடர்பான தமது அணுகுமுறைகளை பார்வையை உலக சமூகம் மாற்றிக் கொள்ள வேண்டுமென இச்சபையில் கேட்கின்றேன்.

புலிகள் சமாதானத்தின் மீதும் மக்கள் மீதும் உண்மையாக விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்களேயானால் அவர்கள் தமது கடந்த கால சமகாலத் தவறுகளை ஏற்றுக் கொண்டு உண்மையான ஜனநாயக வழிக்கு வருவார்கள்? எதற்காக அப்படி வர மறுக்கிறார்கள்? புலிகள் சமாதானத்திற்கு அச்சப்படுகின்றார்களா? அவர்களால் யுத்த சூழ்நிலையில் மட்டுந்தான் வாழ முடியுமா? ஜனநாயகச் சூழலில் அவர்களால் உயிர் வாழ முடியாதா? தங்களது சுய இலாபங்களுக்காகப் புலிகளுக்காகப் பரிந்து பேச இங்கு வந்திருப்பவர்களுக்கு இது நன்கு புரியம். அப்படி வந்தவர்கள் தங்களது மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனை “பங்கருக்குள்” இருந்து வெளியே அழைத்து வர இவர்களால் முடியுமா? பிரபாகரனை மக்களோடு பேச வைக்க முடியமா? பிரபாகரனின் மனதில் சமாதானம் குறித்த நம்பிக்கையை விதைக்க இவர்களால் முடியுமா? மக்கள் அனுபவிக்கும் துன்னபங்களைப் பிரபாகரனுக்கு நேரடியாகத் தெரியப்படுத்த முடியுமா? உடுத்த உடுப்போடு ஒரே நாளிலே முஸ்லிம் மக்களை அவர்களது நீண்டகால வாழ்விடங்களை விட்டுத் துரத்திய புலிகள் அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற அனுமதிபார்களா? அப்படிச் செய்ததற்கப் பகிரங்க மன்னிபபு கேட்பார்களா?

1987க்கு முன்னர் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படு கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் உரிமை மறுப்புக்களுக்கும் மக்களிட்ட ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் பெருந்தன்மையோடு மன்னிப்புக் கோரியிருந்தார். அதை நாம் வரவேற்றிருந்தோம். ஆனால், “எதிரிக்கு எதிராக  என்று கூறி ஆயுதம் ஏந்திய புலிகள் எதுவும் அறியாத அப்பாவிச் சிங்கள மக்கள் மீது மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்தியிருந்தார்கள்.

அந்த மக்களை கொன்று குவித்தார்கள். புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிச் சிங்கள மக்களின் உறவுகளிடம் பெரும்பான்மைச் சமூகத்திடம் புலிகள் பகிரங்கமாக மன்னிப்பு கோருவார்களா? ஆயிரக் கணக்கான மாற்று இயக்கப் போராளிகளையும் பொதுமக்களையும் கொன்று குவித்தவர்கள் புலிகள். அதற்காகத் தமிழர் சமூகத்திடம் புலிகள் பகிரங்க மன்னிப்புக் கோருவார்களா? தொடரும் படுகொலைகள் நிறுத்தித் தம்மை ஜனநாயகவாதிகள் என்பதை நிரூபிப்பார்களா? அரச தரப்புக்கு எதிராக மட்டும் அர்த்தமற்ற வகையில் கூச்சலிடும் இவர்களால் “தமிழ்த் தேசியம்” என்ற போர்வைக்குள் மறைந்து நின்று கொண்டு புலிகள் பெரும் கப்பத்தை நிறுத்த முடியுமா? புலிகளின் கொலைகளை நிறுத்த முடியமா??

அரச தரப்புக்குரிய நேரத்திலிருந்து இரண்டு நிமிடங்கள் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். அப்படிப் புலிகள் ஒரு நேர் வழிக்கு வரும் பட்சத்தில் மட்டுந்தான் அவர்கள் கூறும் சமாதானம் குறித்து மக்கள் நம்பிக்கை வைக்க முடியும் என்பதை இந்தச் சபையில் நான் கூறி வைக்க விரும்புகின்றேன். என்மீதான புலிகளின் மரண அச்சுறுத்தல்கள் ஏனைய படுகொலைகள் முயற்சிகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்ற அராஜகங்களுககு மத்தியிலும் ஈ.பி.டி.பி. தனது சமாதான வழிமுறையிலிருந்து தடம் புரளாமல் இன்னம் பயணித்து வருகின்றது.பல்லுக்குப் பலி பலிக்குப் பலி இரத்தத்திற்கு இரத்தம் என்ற வகையில் எதிர் நடவடிக்கiயில் இறங்கி எமது மக்களின் சமாதானக் கனவுகளை உடைத்துப் போட ஈ.பி.டி.பி. ஒருபோதும் எண்ணியதில்லை. நாம் தொடர்ந்தும் கடைப்பிடித்து வரும் மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக வழிமுறையினை எமது பலவீனமாக யாரும் கருதுவார்களேயானால் அது அவர்களின் அறியாமை என்றே கருத இடமுண்டு. இந்த யாதார்த்த நிலைமைகளை உணர்ந்து எமது மன உணர்வுகளை இந்தச் சபை புரிந்து கொள்ளுமென நான் நம்புகின்றேன்.

புலிகள் பொதுக்கட்டமைப்புக் குறுத்துக் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். உண்மையில் புலிகளின் உள்நோக்கம் எதுவாக இருக்கும் என்பது உலகறிந்த விடயம். ஆனாலும் சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னமும் துயரப்பட்டிருக்கும் மக்களின் நலன் குறித்த இந்த விடயத்தில் நாம் ஒரு தெளிவான நிலைப்பாட்டினை எடுத்திருக்கின்றோம். இன அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் பன்மைத்துவம் பேணப்பட வேண்டுமென்றும், சகல மட்டங்களிலிருந்து அதற்கான ஏற்பாடுகள் உறுதிப்பட வேண்டுமென்றும் பொதுக்கட்டமைப்புக் குறித்து எமது மாற்று யோசனைகளை நாம் சமர்ப்பித்திருக்கின்றோம்.பொதுக்கட்டமைப்போடு மட்டும் நின்றுவிடாமல் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுகள் பேச்சுவார்த்தைகளும் தொடரப்பட வேண்டுமென்றே வலியுறுத்தியுள்ளோம். ஜனநாயக பன்மைத்துவ அம்சங்களுடனான பொதுக்கட்டமைப்பு என்பது அரசியல் தீர்வுகளை நோக்கி நகர்வுகளுக்கான ஒரு படிக்கல்லாக அமையுமென நம்புகிறேன்.

ஆகவே தான் பாதிக்கப்பட்ட தேசத்திலுள்ள மக்களின் துயர் துடைப் பதற்காகவும் இனப்பிரச்சினை தீர்வு நோக்கிய ஆரம்ப நகர்வுக்காகவும் ஜனாதிபதி சமாதான எண்ணங்களுக்கும் பலம் சேர்ப்பதற்காகவும் நாம் இந்த விடயத்தை ஆதரித்த நிற்கின்றோம். தமிழ் பேசும் மக்களுக்கு உரிமை வழங்குவது தமிழ் பேசும் மக்;களின் நிம்மதியான வாழ்வுக்கான ஏற்பாடுகளை மிகவும் திறந்த மனதுடன் செய்வதனுடாக தமிழ் பேசும் மக்களை வெற்றகொள்வதும்தான் புலிகளை வழிக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வழிமுறையாகும். இப்பணியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு மேற்கொள்வதற்கு எமது கட்சியின் சார்பிலும் தமிழ் பேசும் மக்களின் சார்பிலும் நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். அரசியல் தீர்வு என்பது புலிகளுக்கோ? அல்லது வேறு யாருக்குமோவல்ல அது துயரப்படும் மக்களுக்கு மாத்திரமே ஒடுக்கப்பட்ட எமது மக்களுக்கு மாத்திரமே எனவே மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் அதனை ஏற்கத்தயாரகட்டும் என்பதனை எமது மக்கள் சார்பாகத் தெரியப்படுத்தி இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டு எனது உரையை முடிக்கின்றேன்.

தற்போது திருமலை நகரிலே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் சமாதானச் சூழலை எதிர்பார்த்திருக்கும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் மீண்டும் சமாதானம் தொடர்பான அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடக்கூடும். இன விரிசலை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைளை எந்தத் தரப்பு மேற்கொண்டாலும் அதனைக் கட்டுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பு அரசுக்குண்டு. இந்த வகையில் அகிம்சை வழியைப் போதித்த புத்தபெருமானின் விஷேட தினமாகிய வெசாக் தினத்தை நாம் எதிர்நோக்கியிருக்கும் வேளையில் வன்முறை வழிகளைக் கைவிடுமாறு இச்சபையில் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டு எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

20 மே 2000

Related posts:


தமிழ் மொழி மூலப் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
புத்தபெருமானின் சிலையை ஒரு ஆக்கிரமிப்பு அடையாளமாக சில இனவாதிகள் பாவிப்பது தடுக்கப்பட வேண்டும்-நாடாளு...
வடமாகாணத்தில் பாழடைந்து கிடக்கும் அணுகு வீதிகள் பாலங்கள் எப்போது புனரமைக்கப்படும் - நாடாளுமன்றில் டக...