வடமாகாணத்தில் பாழடைந்து கிடக்கும் அணுகு வீதிகள் பாலங்கள் எப்போது புனரமைக்கப்படும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, August 23rd, 2017

தெற்கு அதிவேகப் பாதைக் கருத்திட்டத்தின் கட்டம் 1 2 3 4க்கு ஆகவும் கொழும்பு சுற்றுவட்ட அதிவேகப் பாதையின் கடவத்தை – கரவலபிட்டிய பகுதிகளுக்காகவும் வீதி விஸ்தரிப்பு மேம்படுத்துகை தொடர்பான வேலைகளுக்கான குறை நிரப்பு மதிப்பீடுகளுக்காகவும் நிதி ஒதுக்குவதை நாங்கள் ஆதரிக்கின்றோம்.
இதே நேரத்தில் வடமாகாணத்தில் பிரதான வீதிகளில் இருந்து கிராமங்களுக்குப் பிரிந்து செல்லும் அணுகு வீதிகளும் அவ்வீதிகளில் அமைந்துள்ள மதகுகள் பாலங்கள் பாதையோர வடிகால்கள் பழுதடைந்த நிலையிலுள்ளன. யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இதே நிலமைதான் காணப்படுகின்றது. இவற்றை மழைக்காலம் தொடங்கும் முன்னர் திருத்த வேண்டும். பராமரிப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். வட மாகாணத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகார எல்லைக்குள் புனரமைக்க வேண்டிய வீதிகளின் பட்டியலையும் இச்சபையில் சமர்ப்பிக்கின்றேன். நான் இங்கு சமர்ப்பித்துள்ள பட்டியலிருந்து எந்த வீதிகளில் முதலில் செய்ய வேண்டும் என்பதை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிப்பதற்கு உத்தேசித்துள்ளேன். இதற்கான நிதி ஒதுக்கீடுகளை இவ்வாண்டில் செய்ய முடியாவிட்டாலும் 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு கௌரவ அமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன்.
பெருந்தெருக்கள் அமைச்சு மத்திய மாகாணம் தென் மாகாணங்களில் உள்ள மாவட்டங்களில் அணுகுபாதைகள் மதகுகள் பாலங்கள் பாதையோர வடிகால்களின் திருத்தவேலைப் பராமரிப்பு வேலைகளை வீதி வாரங்கள் என்ற செயற்த்திட்டத்தின் மூலம் நிதியொதுக்கீடுகளைச் செய்து அக் கிராமத்து மக்களின் பங்களிப்புடனும் ஏனைய திணைக்களங்கள் அமைச்சுக்களின் ஒத்துழைப்போடும் செய்வதுடன் அத்திணைக்களங்களின் மூலமாக மக்களுக்குச் சென்றடைய வேண்டிய வேலைகளையும் இடம் பெயர் சேவை மூலம்மிகச் சிறப்பாக வழங்குவதாக நாங்கள் அறிய வருகின்றோம்.
இந்த வீதி வாரச் செயல்த் திட்டம் தென் இலங்கை மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்காக அமைச்சர் கிரிஎல்ல அவர்களையும் அமைசின் செயலளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரையும் அதிகாரிகளையும் பொறியியலாளர்களையும் தொழில் நுட்ப உத்தியோகஸ்தர்களையும் இத்துடன் சம்பந்தப்பட்ட ஏனைய ஊழியர்களையும் பாராட்ட வேண்டும்.

ஆனால் இது போன்ற வீதி வாரங்கள் செயல்த்திட்டம் வடமாகாணத்தின் மாவட்டங்களில் நடைபெற்றதாக எனக்குச் செய்திகள் எட்டவில்லை. இம் மாவட்டங்கள் 30 வருட யுத்த கெடுபிடிகளினால் பாதிக்கப்பட்டமையினால் வடமாகாண மாவட்டங்களுக்கு முன்னுரிமையளிக்குமாறும் முதலில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வீதி வாரங்கள் நிகழ்ச்சித் திட்டத்தை ஒழுங்கு செய்து பல்வேறு வீதித் திருத்த வேலைகளைச் செய்யப்படுவதுடன் ஏனைய சேவைகளையும் மக்களுக்கு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். எனவே கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வீதி வாரநிகழ்ச்சிகளை நடாத்துவதற்காக நிதி ஒதிக்கித் தருமாறும் அதற்கான கட்டளைகளையும் பணிப்புரைகளையும் அமைச்சுக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடுமாறும் கௌரவ அமைச்சர் கிரிஎல்ல அவர்களை வினயமாகக் வேண்டுகின்றேன். இவ்வாறு ஒழுங்கு செய்யும் பட்சத்தில் நாம் அனுசரணை வழங்குவதுடன் அப் பிரதேச மக்களையும் பங்குபற்றச் செய்து வீதி வார நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவி புரிய முடியும்;. எனவே எனது கோரிக்கையை நிறைவேற்ற உதவி செய்யுமாறு அமைச்சரை மீPண்டும் ஒரு முறை வேண்டுகின்றேன்.

Related posts:

வடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகி...
நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் இறுக மூடப்பட்டு கிடக்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ச...