வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Monday, December 5th, 2016

வடக்கு மாகாணத்தில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 820 கீழ்நிலைப் பணியாளர்கள் கடந்த கஷ்டமான காலகட்டங்களிலிருந்து இதுவரை எவ்விதமான கொடுப்பனவுகளும் அற்ற நிலையில் கடமையாற்றி வருவது பற்றி ஏற்கனவே கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். அந்தப் பணியாளர்களது எதிர்காலம் கருதியும், அங்கு நிலவும் வெற்றிடங்கள் தொடர்பிலும் அவதானத்தில் கொண்டு கௌரவ அமைச்சர் அவர்கள் இந்தப் பணியாளர்கள் தொடர்பில் ஏதேனும் விஷேடமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் சுகாதார, போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

அந்த வகையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான பற்றாக்குறையே அதிகமாகக் காணப்படுகின்றது. இதனை கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானத்தில் கொள்வார் என நினைக்கிறேன். குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 820 கீழ்நிலைப் பணியாளர்கள் கடந்த க~;டமான காலகட்டங்களிலிருந்து இதுவரை எவ்விதமான கொடுப்பனவுகளும் அற்ற நிலையில் கடமையாற்றி வருவது பற்றி ஏற்கனவே கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். அந்தப் பணியாளர்களது எதிர்காலம் கருதியும், அங்கு நிலவும் வெற்றிடங்கள் தொடர்பிலும் அவதானத்தில் கொண்டு கௌரவ அமைச்சர் அவர்கள் இந்தப் பணியாளர்கள் தொடர்பில் ஏதேனும் விN~டமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.

இப் பணியாளர்களில் பலர் உரிய தகுதிகளைக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அந்த வகையில் அவர்களை நிரந்தரப் பணியில் இணைத்துக் கொள்வதற்கும், உரிய தகுதியினைக் கொண்டிராதவர்களுக்கு, அவர்களது நீண்டகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டும், தற்போது காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டும் அத் தகுதியினைப் பெற அவர்களுக்கு ஒரு கால அவகாசத்தை வழங்கி, கௌரவ அமைச்சர் அவர்கள் ஒரு விN~ட திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அதே நேரம், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், தாதியர்களுக்கான பற்றாக்குறை அதிகமாகக் காணப்படும் நிலையில், உயர்தரத்தில் விஞ்ஞானப் பாடங்களில் சித்தியடைவோர் குறைந்து வரும் காரணத்தால், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞானமும் கட்டாயப் பாடம்; என்பதால், உயர் தரத்தில் ஏதாவது பாடங்களில் திறமைச் சித்தி பெறுகின்றவர்களுக்கு தாதியர் பயிற்சிகளை வழங்குவதற்கு ஏற்ற வகையில் ஒரு கொள்கைத் திட்டமொன்றை வகுக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும்,

அத்துடன், தனியார்துறை தாதியர் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு அரச தாதியர்களுக்கான பரீட்சைகளில் தோற்றக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி, அதில் சித்தியடைவோருக்கு அரச மருத்துவ மனைகளில் நியமனங்களை வழங்குவதற்குரிய வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

தாதியர்கள், மருந்தகர்கள், ஆய்வுகூட  மற்றும் இயன்முறை மருத்துவக்  கற்கைகள் என்பன தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனியான பிரிவாக செயற்பட்டு வருகின்ற நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அது மருத்துவ பீடத்தின் கீழேயே இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே இதனையும் தனியான ஒரு துறையாக ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை எடுக்கும் படியும்,

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான தனிப் பிரிவு அமைப்பதில் கௌரவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் காட்டி வருகின்ற அக்கறையை நான் வரவேற்கின்ற அதே நேரம், வடக்கு மாகாணத்திற்கென தனியானதொரு சிறுவர்களுக்கான மருத்துவமனையை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் படியும்,

அதே நேரம், தற்போது எமது நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களின் தொகையானது நூற்றுக்கு 12 வீதமாக இருப்பதாகவும், இது 2020ம் ஆண்டளவில் 20 வீதமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இந்த வயோதிபப் பிராயத்தையுடையவர்கள் பல்வேறு வகையிலான நோய்களுக்கு ஆட்படக்கூடும் என்பதால், அதற்குப் பாரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படுவதுடன், அதற்கென விN~ட கவனம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.

எனவே, தற்போது சிறுவர்களுக்கென தனியான பிரிவுகள் மருத்துவ மனைகளில் ஏற்படுத்தப்படுவதுபோல், வயோதிபரக்களுக்கெனவும் தனியான பிரிவுகளை ஏற்படுத்துவதற்கும், நாட்டில் வயோதிபர்களுக்கென தனியானதொரு மருத்துவ மனையை அமைப்பதற்கும், 75 வயதுக்கு மேற்பட்டோர்கள் தொடர்பில் விN~ட கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும்,

தற்போது யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பகுதியில் செயற்பட்டு வருகின்ற புற்றுநோய் மருத்துவ மனையானது போதிய வளப் பற்றாக்குறை மற்றும் போதிய பராமரிப்புகளின்றி காணப்படுவதால், அதை மஹரகம புற்று நோய் மருத்துவமனையைப் போன்று மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து, அதற்குப் போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும்,

கௌரவ சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், புகையிலை உற்பத்திகள் கட்டுப்பாடு தொடர்பில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களும், கௌரவ சுகாதார அமைச்சர் அவர்களும் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், சீனி, உப்பு மற்றும் கொழுப்பு போன்றவை தொடர்பிலும் பாராட்டத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், இவை தொடர்பில் மேலும் வலுமிக்கதான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும், பொதுவாகத் தேநீர்க் கடைகளில் தேநீர் வழங்கும்போது. சீனியைத் தேநீரில் கலந்து வழங்கும் ஏற்பாடுகளுக்குப் பதிலாக, சீனியைப் புறம்பாக வழங்கக் கூடிய வாய்ப்புக்களை கட்டாயப்படுத்துமாறும், இவ்வாறான செற்பாடுகளைச் செயலூக்கம் மிக்கதாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், வெளிநாடுகளில் மருத்துவத் துறைப் படிப்புகளை மேற்கொண்டு இலங்கைக்குத் திரும்புகின்றவர்களுக்கு, இலங்கை மருத்துவ சங்கத்தின் மூலமாக நடாத்தப்படுகின்ற பரீட்சையில் தோற்றுவதற்காக, அம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உட்படுத்துகின்ற நிலையில், ஏற்கனவே நமது நாட்டில் நடைமுறையிலிருந்த அம் மாணவர்களின் விருப்பங்களை அறிந்து அவர்களுக்குப் பொருத்தமான பல்கலைக்கழகங்களுக்கு அவர்களை உட்படுத்துகின்ற நடைமுறை தற்போது பின்பற்றப்படுவதில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இறுதியாக இவ்வாறு ருஹ_னு பல்கலைக்கழகம் சென்ற 69 மாணவர்களில் 6 பேர் மாத்திரமே சித்தியடைந்ததாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக, ருஹ_னு பல்கலைக்கழகத்தில் கற்கச் செல்கின்ற தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு மொழி பெயர்ப்புகள் இடம்பெறுவதில்லை என்றும், அதே நேரம் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கு மொழி பெயர்ப்புகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

எனவே, கௌரவ அமைச்சர் அவர்கள் இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், யாழ்ப்பாணத்தில் அரச மருந்தாக்கட் கூட்டுத்தாபனத்தின் ஒசுசல விற்பனை நிலையத்தை நாம் ஏற்கனவே நிறுவியுள்ள நிலையில், அதற்குரிய இடவசதி கிடைக்காத காரணத்தினால் தற்போது அது யாழ் போதனா வைத்தியசாலையை அண்டிய பகுதியில் அமையப் பெற்றில்லாததன் காரணமாக, அதன் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. எமது மக்களுக்கு மலிவான விலைகளிலும், இலகுவாகவும் மருந்து வகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக இந்த நிறுவனத்தை யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து உதவுமாறும்,

மேலும், யாழப்பாணத்தைப் பொறுத்தவரையில் தீவகப் பகுதி மக்களின் நன்மை கருதி தற்போது வேலணையில் அமைந்துள்ள பிரதேச வைத்திய சாலைக்கு மேலும் பல வசதிகளை மேற்கொண்டு அதனைத் தள வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுத்து உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், தற்போது இலவச அம்புலன்ஸ் சேவைகள் தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், பொது மக்களுக்கு அது தொடர்பான அறிவுறுத்தல்கள் போதியளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,

வீதி விபத்துகள் ஏற்படுகின்ற நிலையில் விபத்துக்குட்படுகின்ற நபரை உடனடி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தும் வகையில் பொது மக்களின் பங்களிப்புகள் இன்மையானது பொதுவாகக் காணக்கூடியதாக உள்ளது. சட்டத்திற்கு முன்னால் தாங்கள் நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்கின்ற அச்சம் காரணமாக அவ்வாறான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள எவரும் முன்வராத நிலையே காணப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சுடன் கலந்துரையாடி விபத்துகளுக்கு உட்படுகின்ற நபரை உடனடியாக அங்கு கூடுவோரால் உரிய மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தும் முகமான ஒரு ஏற்பாட்டினை மேற்கொள்ளுமாறும், அது தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும்,

வடக்கு மாகாணம் உட்பட பல மாவட்டங்களில் போ~hக்கு வழங்கும் திட்டத்தை அரசும், ஏனைய அரச சார்பற்ற சில நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்ற போதிலும், அது குறித்த விழிப்பூட்டல்கள் இன்மை காரணமாக மக்களால் அதனைப் பயன்படுத்த இயலாத நிலை காணப்படுவதால், அது தொடர்பில் உரிய விழிப்பூட்டல்களை மக்களுக்கு எற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts: