அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள் – அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Wednesday, November 24th, 2021

உலகலாவிய ரீதியில் மனித குலமே இன்று கொரோனா கொடிய தொற்று நோயின் சவாலை சந்தித்து வருகிறது. இந்த இடர் காலத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருந்து நாம் விடுபட்டு விட முடியாது.

உலக வல்லரசுகளே இன்று பொருளாதார நெருக்கடிகளுக்குள் அகப்பட்டிருக்கும் இவ்வேளையில்> வளர்முக நாடாகிய இலங்கைதீவு மட்டும் எம்மாத்திரம் என்ற கேள்வி இங்கு எழுகின்றது

இன்றைய சூழலில் இன்னொரு தரப்பினர் இங்கு ஆட்சி பீடத்தில் இருந்திருந்தால்,. எமது நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு போயிருக்கும்.

ஆனாலும், வல்லமை பொருந்திய ஆட்சியும்,. வலிமை மிக்க தலைமைத்துவ ஜனாதிபதியும்,. சிறந்த ஆளுமை மிக்க வழிநடத்தும் பிரதமரும்,. ஆரோக்கியமான திட்டமிடல் அனுபவம் மிக்க ஒரு நிதி அமைச்சரும்,.அவர்களுக்கு பக்க துணையாக நாமும் இன்று ஆட்சி பீடத்தில் இருப்பதால்  இலங்கைத்தீவு இன்றைய இடர் காலத்திலும் முடிந்தளவு பாதுகாக்கப்பட்டு வருகின்றது,

இன்றைய சூழலில் எமது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத் திட்டமானது முன்னேற்றகரமானது என்பதை நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

இன்றைய சூழலில் இருந்து ஒளிமயமான ஒரு சூழலை நோக்கி இலங்கை தீவை ஜனாதிபதி அவர்கள் தலைமை தாங்கி வழிநடத்தி செல்வார் என்ற நம்பிக்கை எமக்குண்டு,

எத்தகைய தடைகளையும் சவால்களையும் அரசியல் குழப்பங்களையும் எதிர் கொண்டு,.. அழகிய எங்கள் இலங்கைத்தீவில் சமூக பொருளாதார அபிவிருத்தியை கட்டியெழுப்ப எமது ஆட்சி திடசங்கற்பம் பூண்டுள்ளது.

சகல இன மத சமூக மக்களும் சரிநிகர் சமன் என்ற சமத்துவ சிந்தனையை நடை முறைப்படுத்தவே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தை ஜனாதிபதி அவர்கள் பிரகடனம் செய்திருக்கிறார்,

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அவ்வாறான நிலை மாறி பரந்த வெளிச்சம் கூட மருண்டவன் கண்ணுக்கு பேயாக தெரியும் காலமாக இது மாறியிருக்கிறது.

காட்சிகளை நிறம் மாற்றி காட்டும் அரசியல் கண்ணாடிகளை கழற்றி விட்டு நிஜங்களை நிஜங்களாகவே பார்ப்பதற்கு சகல அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்.

ஆகவே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தின் கீழ் சகல மக்களும் அரசியல் சமூக பொருளாதார சமத்துவத்தை பூரணமாக அனுபவிக்கும் காலத்தை நாம் உருவாக்குவோம்.

வெறும் அரசியல் புரளிகளுக்கும், வெற்று அரசியல் கூச்சல்களுக்கும் எல்லாக்காலத்திலும் எல்லா மக்களும் ஏமாந்து போய் விட மாட்டார்கள். 

ஆகவே இன மத கட்சி பேதங்கள் இன்றி சகல மக்களையும் சகல கட்சிகளும் வழிநடத்த முன்வர வேண்டும்.

எமது தேசத்தின் மக்களது ஆரோக்கியமான வாழ்க்கையை முன்வைத்து, மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் எடுத்து வருகின்ற முயற்சிகளை நான் ஒரு மக்கள் நேய நோக்கமாகவே பார்க்கிறேன்.

இரசாயன உரம் மற்றும் விவசாய உள்ளீடுகள் மற்றும் சுத்தமற்ற குடிநீர் காரணமாக எமது நாட்டில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள் ஒரு வருடத்தில் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 125,000 க்கும் அதிகமானவர்கள் சிறுநீரக நோயாளர்களாக மாறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஒரு பக்கத்தில் இத்தகைய நோய்களற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு இந்த இயற்கை உரப் பயன்பாடு வழிவகுப்பதுடன், மறுபக்கத்தில் அதிகளவிலான அந்நியச் செலாவணியை மீதப்படுத்தவதற்கும் எம்மால் இயலுமாகின்றது.

இத்தகைய முயற்சிகள் தேசிய உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சகல மக்களுக்கும் சுத்தமான குடிநீர் என்ற திட்டமும் அதற்கான முன்னெடுப்புகளும் நோயற்ற நாடாக இலங்கையினை உருவாக்கும்.

இந்த வரவு செலவுத்திட்டத்தில் நில வேளாண்மைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது,

இது விதைத்த நிலத்தை உழுது ஊருக்கும் பேருக்கும் படங்காட்டும் தேர்தல் நாடகம் அல்ல,

உழைக்கும் உழவர்கள் தொழுதுண்டு வாழாமல் உழுதுண்டு வாழும் வாழ்வியல் உரிமைக்காகாவே அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அது போல், நீர் வேளாண்மைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது,..

இது படகுச்சவாரி செய்து படங்காட்டி அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக அல்ல,.

நீர் வளங்கள் அனைத்தையும் தம் வாழ்வின் நலன்களுக்காக, நாட்டின் முன்னேற்றத்திற்காக் எமது மக்கள் பயன்படுத்தி பயனுற வேண்டும் என்பதற்காகவே அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

கௌரவ சபாநாயகர் அவர்களே!…

அரசியலில் மட்டுமன்றி அபிவிருத்தியிலும் சமத்துவம் கேட்டுத்தான் நாம் அன்று உரிமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.

அந்த வகையில் எமது உரிமை போராட்ட வழிமுறைய மாற்றி தேசிய நல்லிணக்க பாதையில் பயணிக்க தொடங்கியிருந்தாலும் அபிவிருத்தியில் சமத்துவம் என்ற எமது எண்ணங்களும் ஈடேறியே வருகின்றது,..

அழிவு யுத்தம் நடந்து முடிந்த காலத்தில் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபச்ச அவர்கள் அன்று ஜனாதிபதியாக இருந்த போது,  இன்றைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் அன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது,..

வடக்கின் வசந்தம் என்றும் கிழக்கின் உதயம் என்றும் தமிழ் பேசும் மக்களுக்கு அபிவிருத்தியில் சமவுரிமை வழங்கப்பட்டதை நான் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

அது மட்டுமின்றி தேவைக்கேற்ற நிதி ஒதுக்கீடு என்ற வகையில், ஏனைய எட்டு மாகாணங்களையும் விட அதிகமான நிதியை வட மாகாண சபைக்கு ஒதுக்கப்படிருந்ததையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆனாலும், ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்ற வட மாகாண ஆளுமையற்ற தலைமைகளால் அது வடக்கு மக்களின் வாய்க்கு எட்டாமல் போனதையும் நாம் மறந்து விடக்கூடாது.

தேசிய உற்பத்திகளை அதிகரிக்கக்கூடிய அனைத்து வழிகளையும் மேற்கொள்வதற்கும்,  அந்த உற்பத்திகளை தரமான உற்பத்திகளாக மேற்கொள்வதற்கும் நாம் முன்வர வேண்டும்.

குறிப்பாக, எமக்கு போதியளவில் தரமான வளங்கள் உள்ளன. அவற்றின் பயன்பாட்டை வளமாக்கிக் கொள்வதற்கான உழைப்பிருந்தால்,  இந்த நாடு அனைத்து விதமாகவும் தன்னிறைவு காணும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, விடைபெறுகிறேன்.

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!!

000

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா . 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
நாட்டு நலன்களுக்கு இழப்புகள் ஏற்படாத வகையில் தேசிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவது அவசியமாகும் - கோப...
வாழ்வாதாரங்களுக்கும்,வலுவாதாரங்க ளுக்கும் கட்டாந்தரையிலிருந்தே முயற்சிக்க வேண்டிய நிலையில் எமது மக்க...

அமரர் அமிர்தலிங்கம் போன்றவர்களின் ஜனநாயக தலைமைத்துவம் அலட்சியப்படுத்தப்பட்டு அவர்களின் அமைதிவழிப் போ...
வன விலங்குகளைப் பாதுகாக்க செயற்றிறன்மிக்க நடவடிக்கை தேவை! -டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
யுத்தத்தில் உயிரிழந்தஉறவுகளை நினைவுகூர பொதுத் திகதியும்,பொதுத்தூபியும் வேண்டும்நாடாளுமன்றத்தில் டக்ள...