யுத்தத்தில் உயிரிழந்தஉறவுகளை நினைவுகூர பொதுத் திகதியும்,பொதுத்தூபியும் வேண்டும்நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பியின் பிரேரணைநிறைவேற்றம்!

Friday, September 8th, 2017

எமது நாட்டைப் பொறுத்தவரையில்,சுமார் மூன்றுதசாப்தகாலமாக, பல்வேறுவகையிலான அழிவுகளைக் கொண்டுதந்திருந்த யுத்தமானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், அந்தயுத்தம் எமதுநாட்டில் உருவாவதற்கு ஏதுவானகாரணிகள் இனங்காணப்பட்டு, அவைமுற்று முழுதாகவே களையப்படவேண்டியது அவசியமானதும், அவசரமானதுமான செயற்பாடாக இருக்கவேண்டும். உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு உரியவகையில் ஒருபொதுத் தூபிஒன்றை இறுதியுத்தம் நடைபெற்றிருந்த பகுதியில் பொருத்தமான ஓர் இடத்தில் அமைப்பற்கும், அதற்கென ஒருதிகதியைக் குறித்தொதுக்குவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றினை அமைத்தல் மற்றும் நினைவுகூர்வதற்காக பொதுத் திகதியொன்றைக் குறித்தொதுக்குதல் தொடர்பான தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றினார். அந்தப்பிரேரணை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணையை முன்வைத்து செயலாளர் நாயகம் தொடர்ந்து உரையபற்றுகையில்,

கடந்தகால நிகழ்வுகளை ஆராயுமுகமாக பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும்,அறிக்கைகள் வெளியிடப்பட்டும்,பல்வேறுதரப்பினரால் அதுசார்ந்த நூல்கள் எழுதப்பட்டும் வருகின்ற எமது நாட்டில், கடந்தகாலநிகழ்வுகளின் அனுபவங்களை நேரடியாகப் பெற்றுக் கொண்டுள்ள நாங்கள் வாழ்ந்து வருகின்ற காலத்திலேயே, அத்தகைய நிகழ்வுகள் மீள உருவாகாத வகையிலான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

மக்கள் மத்தியில் புரிந்துனர்வுகளை கட்டியெழுப்புகின்ற செயற்பாடுகளுக்கு முன்பதாக அல்லது அந்தச் செயற்பாடுகளுக்குச் சமாந்திரமான வகையில் எமது மக்களின் உணர்வு ரீதியிலான பிரச்சினைகளையும், ஏனைய அடிப்படை,அன்றாடமற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதுமிகவும் முக்கியமாகும்.

பட்டினியில் கிடப்பவனிடம் போய் தேசியநல்லிணக்கம் பற்றிஉபதேசம் செய்துகொண்டிருப்பதால் எந்தப் பயனும் எட்டிவிடப் போவதில்லை.  அந்தவகையில் எமதுமக்கள் மிகநீண்டகாலமாகவே உணர்வுப் பட்டினியால் வாடிவதங்கிப் போயுள்ளனர். அவற்றின் வெளிப்பாடுகள் நியாயமானதொடர் போராட்டங்களாகதற்போதுஉருவெடுத்து,தொடர்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அந்தப் போராட்டங்களுக்குஉரியதீர்வும்,நியாயமும் எமது மக்களுக்கு கிடைக்கவேண்டும். எமதுநாட்டில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் முதலில், எமது மக்களது உணர்வுரீ தியானபிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டியுள்ளன. அவை தீர்க்கப்பட்டால் மாத்திரமே தேசிய நல்லிணக்கமானது உணர்வுபூர்வமானதாகவும் வலுவுள்ளதாகவும் அமைவதற்கு சாத்தியமாகும். அதேநேரம் இதற்கான முயற்சிகள் சிங்கள மக்களிடையையேயும் அடித்தளத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அன்றி, தேசியநல்லிணக்கம் என்பது பலவந்தமாகக் கட்டியெழுப்பக் கூடியதல்ல.

எனவே, இவ்வாறான எமது மக்களது உணர்வுரீதியிலான பாதிப்புகளைத் தொடர்ந்தும் வளர்த்தெடுத்து, அதனை ஒருவெறுப்பாக எங்கள் மக்கள் மத்தியில் குடியிருத்தாமல், அந்தமக்களை வென்றெடுக்க வேண்டியபொறுப்பு இந்த அரசுக்கு உண்டு என நான் நம்புகின்றேன். எனவே, உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு உரியவகையில் ஒருபொதுத் தூபி ஒன்றை இறுதியுத்தம் நடைபெற்றிருந்த பகுதியில் பொருத்தமான ஓர் இடத்தில் அமைப்பற்கும், அதற்கென ஒரு திகதியைக் குறித்தொதுக்குவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இதனை இந்த அரசு மேற்கொள்ளுமிடத்து, இந்தஅரசுமீது எமது மக்களின் நம்பிக்கைகள் வலுப்பெறும் என்பதில் சந்தேகமில்லை. என்றும் செயலாளர் நாயகம் தனதுநீண்டஉரையில் குறிப்பிட்டார்.

Related posts:

வலுவிழந்த பொருளாதாரத்தின் மத்தியில் ஏற்றுமதிகளின் மந்தமும், இறக்குமதிகளின் வேகமும் - நாடாளுமன்ற உறுப...
எமது மக்களின் நம்பிக்கையைப் பாதிக்காத வகையில் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் செயற்பட வேண்டும் - சபையி...
காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர...

எமது முயற்சியால் கொண்டுவரப்பட்ட கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் பணிகள் பூர்த்தி செய்யப்படாதிரு...
வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறு...
ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறைக...